தஞ்சை: அமைச்சரின் உத்தரவை காற்றில் விட்ட அதிகாரிகள்; சாக்கு பற்றாக்குறையால் நெல் கொள்முதல் நிறுத்தம்

தஞ்சை:  அமைச்சரின் உத்தரவை காற்றில் விட்ட அதிகாரிகள்; சாக்கு பற்றாக்குறையால் நெல் கொள்முதல் நிறுத்தம்

தஞ்சை மாவட்டத்தில் 58 ஆயிரத்து 948 எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு தஞ்சை மாவட்டத்தில் 274 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்த உணவு அமைச்சர் காமராஜ், கொள்முதல் பணிகள் விரைவுபடுத்தப்படும் நாளொன்றுக்கு ஆயிரம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படும் . மேலும் சாக்கு தட்டுப்பாடு ஏற்படாது என உறுதி அளித்திருந்தார்.

தஞ்சை:  அமைச்சரின் உத்தரவை காற்றில் விட்ட அதிகாரிகள்; சாக்கு பற்றாக்குறையால் நெல் கொள்முதல் நிறுத்தம்

ஆனால் கொள்முதல் நிலையங்களில் நாளொன்றுக்கு 600 முதல் 700 மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. தஞ்சை அருகே உள்ள அருள்மொழிபேட்டை உள்ளிட்ட பல கொள்முதல் நிலையங்களில் சாக்கு பற்றாக்குறை காரணமாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை:  அமைச்சரின் உத்தரவை காற்றில் விட்ட அதிகாரிகள்; சாக்கு பற்றாக்குறையால் நெல் கொள்முதல் நிறுத்தம்

மேலும் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்துச் செல்ல தேவையான சரக்கு உந்துகள் வராததால் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் முளைத்து சேதமடைந்துள்ளது .

15 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் சாலையோரங்களில் குவித்து வைத்துள்ளனர். அவை தொடர்ந்து மழையில் நனைந்து சேதம் அடைந்து வருகிறது. அவற்றை காயவைப்பது பாதுகாப்பது என விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். நெல்மணிகள் மழையில் நனைவதால் ஈரப்பதம் அதிகமாகிறது. மறுபடியும் வெயிலில் உலர்த்தி ஈரப்பதத்தை குறைந்து விற்பனை செய்ய கால தாமதமாகி வருகிறது .

தஞ்சை:  அமைச்சரின் உத்தரவை காற்றில் விட்ட அதிகாரிகள்; சாக்கு பற்றாக்குறையால் நெல் கொள்முதல் நிறுத்தம்

விவசாயிகள் கூறுகையில் அறுவடை செய்த நெல்லை 15 நாட்களுக்கு மேலாக விற்பனை செய்ய முடியாத சூழலில் சாலையோரங்களில் குவித்து வைத்துள்ளோம் தொடர்ந்து மழை பெய்வதால் பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது உணவு அமைச்சர் காமராஜ் தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்து தினமும் ஆயிரம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படும் சாக்குகள் தேவையான அளவு வழங்கப்படும் என அறிவித்திருந்தார் ஆனால் இதுவரை ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதில்லை

தேவையான சாக்குகள் இல்லை என்பதால் கொள்முதல் நடைபெறவில்லை அமைச்சரின் உத்தரவை அதிகாரிகள் மதித்து நடக்கவில்லை என குற்றம் சாட்டினர். உடனடியாக கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான சாக்குகளை அனுப்பி கொள்முதலை துவக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.