ஈரோடு: நவராத்திரி விழா கோலாகல தொடக்கம்- பிரம்மாண்ட கொலு கண்காட்சி

ஈரோடு:  நவராத்திரி விழா கோலாகல தொடக்கம்- பிரம்மாண்ட கொலு கண்காட்சி

கடந்த 11 ஆண்டுகளாக ஈரோடு திருநகர் காலனியில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 12ஆவது ஆண்டான இந்த வரும் நடைபெறும் இவ்விழாவும் கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது.ஈரோடு கே.என்.கே., சாலையில் உள்ள டேபிள் டென்னிஸ் உள் விளையாட்டரங்கில், நவராத்திரி கொலு பொம்மை விழா தொடங்கியது.

ஈரோடு:  நவராத்திரி விழா கோலாகல தொடக்கம்- பிரம்மாண்ட கொலு கண்காட்சி

இதை முன்னிட்டு 2020 பொம்மைகளை வைத்து, பிரமாண்ட கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. விழா விற்கு விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் அல்ஃபா இளங்கோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். வாசவி கல்லூரி உடற்கல்வி இயக்குனர் டாக்டர் ரமேஷ் வரவேற்றார். இதைத்தொடர்ந்து விழாவில் ஜீ டிவி புகழ் செல்வி தன்யா ஸ்ரீ ஹரி பாஸ்கர் நவராத்திரி பக்திப் பாடல்களைப் பாடி அனைவரையும் பரவசப்படுத்தினார்.

ஈரோடு:  நவராத்திரி விழா கோலாகல தொடக்கம்- பிரம்மாண்ட கொலு கண்காட்சி

விழா ஏற்பாடுகளை செய்திருந்த அனிதா ரமேஷ், ‘’ கடந்த 11 வருடங்களாக நவராத்திரி கொலு விழா நடத்தி வருகிறோம் இந்த ஆண்டும் சுமார் கொரோனா இல்லாத மானுடம் என்ற ஸ்லோகத்தில், தலைப்புகளில், கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. 300 தலைப்புகளில் 10 லட்சம் மதிப்பில் 2020 பொம்மைகள் இதில் இடம்பெற்ற உள்ளது வரும் தலைமுறையினர் பண்பாடு மற்றும் நட்புகளை உறவுகளை வளர்ப்பதற்கும் போற்றுதலுக்கும் மாதிரி விழா மிகவும் உறுதுணையாக உள்ளது.

ஈரோடு:  நவராத்திரி விழா கோலாகல தொடக்கம்- பிரம்மாண்ட கொலு கண்காட்சி

விழாவில் துர்க்கை லக்ஷ்மி சரஸ்வதி ஆகிய பெண் தெய்வங்கள் வழிபாடு நடைபெறுகிறது. ஒன்பது நாட்கள் நடைபெறும் விழா முடிவில் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது’’ என்று கூறினார்.