திருச்சி: ஜே.இ.இ தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

திருச்சி: ஜே.இ.இ தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

திருச்சி மாவட்டத்தில் ஜே.இ.இ தேர்வில் வெற்றிபெற்று திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயில தேர்வான அரசுப்பள்ளி மாணவர்கள் சோதுபதி மற்றும் புகழரசி ஆகியோருக்கு ஆட்சியர் சிவராசு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். பின்னர், இந்நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் சிவராசு, தேசிய தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் அளித்த பயிற்சியின் மூலம் 2 மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வில் வெற்றிபெற்று உள்ளதாகவும், மேலும் ஹரிகிருஷ்ணன் என்ற மாணவர் நீட் தேர்வில் 423 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

திருச்சி: ஜே.இ.இ தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

மேலும், தமிழகம் முழுவதும் நீட் தேர்வில் 1,633 மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து தேர்வாகியுள்ளதாகவும், இதில் திருச்சி மாவட்டத்தில் 124 பேர் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். திருச்சி தேசிய தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் மாவட்ட ஆட்சியர் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தேசிய தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் குழு மூலம் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜே.இ.இ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

திருச்சி: ஜே.இ.இ தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு