Home அரசியல் சசிகலாவின் உடல்நிலை குறித்து வெளியான பரபரப்பு செய்திக்கு அவரே அளித்திருக்கும் விளக்கம்!

சசிகலாவின் உடல்நிலை குறித்து வெளியான பரபரப்பு செய்திக்கு அவரே அளித்திருக்கும் விளக்கம்!

சசிகலாவின் விடுதலை குறித்து அவ்வப்போது ஒரு தகவல் வந்துகொண்டே இருக்கும் நிலையில், அவரது உடல்நிலை குறித்தும் அடிக்கடி வெளியாகும் செய்திகளால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி வருகின்றார்கள். அது குறித்து சசிகலாவே சிறையில் இருந்து விளக்கம் கடிதம் எழுதி இருக்கிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு வருடங்களாக இருக்கிறார் சசிகலா. அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வெளிவந்தது. பின்னர் ஆகஸ்ட் 28ம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வந்தது. உண்மைமையில் , சசிகலாவுக்கான அபராத தொகையினை இன்னமும் கட்டாமல் இருப்பதாகவும், அதை கட்டி முடித்தவுடன் தான் சசிகலாவின் விடுதலை குறித்து சிறைத்துறை அறிவிக்கும் என்றும் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்திருந்தார்.

அதுபோலவே, சசிகலாவுக்கு சர்க்கரை பாதிப்பு இருப்பதால், சிறையில் கிடைக்கும் சிகிச்சைகள் போதாமல் வெளியே மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அவரது உறவினர்கள் விரும்புகிறார்கள் என்று செய்தி வெளியானது. மேலும், சசிகலா வெளியே இருந்த வரைக்கும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சர்க்கரை வியாதிக்கு மாத்திரைகள், ஊசிகள் மற்றும் உணவு முறைகளை பாலோவ் செய்து வந்கொண்டிருந்தார். இதே மாதிரியான முறைகளை சிறைக்குள் அவரால் பின்பற்ற முடியததால், சசிகலாவுக்கு சிறுநீரக பாதிப்பும் ஏற்படத் தொடங்கிவிட்டது. இதனால், அவரை உடனே வெளியே கொண்டு வந்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், டயாலிசிஸ் வரைக்கும் கொண்டு போய்விடும் சிறுநீரக பாதிப்பு என அவரது உறவினர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள் என்றும் வெளியான செய்தியால் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரத்தை வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், கடிதம் மூலமாக சசிகலாவின் கவனத்துக்கு கொண்டு செல்லவும், அதற்கு சசிகலா எழுதியிருக்கும் பதில் கடிதத்தில், ‘’எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி முற்றிலும் தவறானது. நான் வணங்கும் இறைவன் ஆசியோடும்.என் உடன் பிறவா அக்காவின் ஆசியோடும் அவரது கோடிக் கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளாலும் நான் நல்ல உடல்நலத்துடன் உள்ளேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

பைனான்சியர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

மதுரை திண்டுக்கல் மாவட்டத்தில் பைனான்சியர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் ராதாராஜ் நகரை சேர்ந்தவர்...

நிவர் புயல் அப்டேட்: காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு...

சிறுமியை கடத்தி திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது

தர்மபுரி தருமபுரியில் 12ஆம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியை...

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி எம்எல்ஏ மனு

திருப்பத்தூர் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம், திமுக எம்எல்ஏ நல்லதம்பி மனு வழங்கினார். அந்த...
Do NOT follow this link or you will be banned from the site!