Home அரசியல் திமுகவில் இதுபோன்ற கருத்துடையவர்கள் இப்போதே வெளியேறிவிடுங்கள் என்று ஸ்டாலின் ஏன் எச்சரிக்கவில்லை?

திமுகவில் இதுபோன்ற கருத்துடையவர்கள் இப்போதே வெளியேறிவிடுங்கள் என்று ஸ்டாலின் ஏன் எச்சரிக்கவில்லை?

தன் கட்சிக்காரர்தான் என்று தெரிந்ததும் அந்த பாய்ச்சல் ஏன் நின்றுவிட்டது என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார் மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா. அதே நேரத்தில், கூட்டணிக்காக திருமாவளவனும் வாய்மூடிக்கொண்டு இருக்கிறாரே என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

தெற்குத்திட்டை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பழ.கருப்பையா, ‘’அண்மையில் ஒரு பஞ்சாயத்து தலைவராக இருக்கிற பெண்மணி, தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்துக்காக தன்னை பஞ்சாயத்து கூட்டங்களில் தரையில் அமர வைத்ததாக குற்றம்சாட்டினார். இது பெரிய கண்டத்துக்குள்ளானது. மறுநாளே ஸ்டாலின், எடப்பாடி ஆட்சியின் லட்சணத்தை பார்த்தீர்களா என்று பரபரப்பு அறிக்கை விட்டார்.

அந்த பெண்மணியை அப்படி தரையில் உட்கார வைத்து அவமதித்ததே உங்க கட்சிக்காரர்கதான் என்று அதிமுக காரர் அறிக்கை விட்டதும், ஸ்டாலினோட வாய் அடங்கிவிட்டது.

எடப்பாடி கட்சிக்காரர் என்று நினைத்தேன்; ஆனால், அது நம் கட்சிக்காரர்தான் என்று தெரியவந்திருக்கிறது என்று சொல்லிவிட்டு, உடனே அவரை வெளியேற்றிவிட்டு, திமுகவில் இதுபோன்ற கருத்துடையவர்கள் இப்போதே வெளியேறிவிடுங்கள் என்று எச்சரித்திருக்க வேண்டாமா? ஸ்டாலின் அதை ஏன் செய்யவில்லை.

திருமாவளவன்


எடப்பாடி அரசு மீது பாய்ந்த ஸ்டாலின், தன் கட்சிக்காரர்தான் என்று தெரிந்ததும் அந்த பாய்ச்சல் ஏன் நின்றுவிட்டது’’என்று கேள்வி எழுப்பும் அவர்,

’’ஆக, தவறான கருத்தின் மீது உங்களுக்கு ஆவேசம் வரவில்லை. எடப்பாடியின் ஆட்சியை இறக்க வேண்டும், தான் ஆட்சியில் அமர்ந்து பெரும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறதே தவிர, வேறொன்றுமில்லை.
பஞ்சாயத்து தலைவர் விவகாரத்தில் திருமாவளவன் கடுமையான அறிக்கை விடுவார் என்று எதிர்பார்த்தேன். கூட்டணிக்காக அவரும் வாய்மூடிக்கொண்டு இருக்கிறார்’’என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மீண்டும் காங்கிரசில் அதிரடி மாற்றங்கள்…. பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவதற்காக காத்திருக்கும் சோனியா காந்தி…

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு, காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஒரு மறுசீரமைப்பை சோனியா காந்தி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில்...

நாட்டின் விவசாயிகளின் விருப்பத்தை குடியரசு தலைவரால் நிராகரிக்க முடியாது… பஞ்சாப் முதல்வர் நம்பிக்கை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை தனது மாநிலத்தில் அமல்படுத்துவதை...

என்கவுண்டரில் 127 பேர் அவுட்… குற்றம் மற்றும் குற்றவாளிகளை அரசு சகித்து கொள்ளாது.. யோகி ஆதித்யநாத்

அரசாங்கம் குற்றம் மற்றும் குற்றவாளிகளை சகித்து கொள்ளாத கொள்கையை கொண்டுள்ளது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 1959ம் ஆண்டில் லடாக்கின் ஹாட்...

மேற்கு வங்கத்தில் தெய்வங்களுக்கு வெள்ளியில் மாஸ்க்… கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வித்தியாசமான முயற்சி

கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை நடத்தும் ஒரு குழு சாமி சிலைகளுக்கு வெள்ளியிலான மாஸ்க் அணிவித்துள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!