Home அரசியல் எம்.ஜி.ஆரால் அகற்ற முடிந்தது போல் ரஜினியாலும் அகற்றிவிட முடியும் - அடித்துச்சொல்லும் பழ.கருப்பையா

எம்.ஜி.ஆரால் அகற்ற முடிந்தது போல் ரஜினியாலும் அகற்றிவிட முடியும் – அடித்துச்சொல்லும் பழ.கருப்பையா

அரசியல் கட்சியை இன்னமும் தொடங்காவிட்டாலும் தொடங்கினால் ஊழலை ஒழிப்பதுதான் கட்சியின் கொள்கை என்று சொல்லி இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில், ரஜினி கட்சி தொடங்குவாரா? அவர் தலைமையில் மூன்றாவது அணி அமையுமா என்பது குறித்து மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது கருத்தினை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

’’மக்கள் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று படுமோசமாக ஜெயலலிதாவை தோற்கடித்தார்கள். ஆனால், மக்கள் மீண்டும் ஜெயலலிதாவையே முதலமைச்சராக ஒப்புக்கொண்டார்கள் என்றால், கருணாநிதியை தோற்கடித்த மக்கள் மீண்டும் கருணாநிதி முதல்வராக வர ஒப்புக்கொண்டார்கள் என்றால் இவ்விரு கட்சிகளையும் தவிர வலிமையாக ஒரு பெரிய கட்சி இல்லை என்பதுதான் காரணம்.


இவ்விரு கட்சிகளையும் அகற்ற வேண்டும் என்று நினைத்து சின்னச்சின்ன கட்சிகள் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆகவே, வலிமை வாய்ந்த ஒரு கட்சிதான் அகற்ற முடியும்.


காங்கிரஸ் வலிமையாக இருந்த காலத்தில் எம்.ஜி.ஆர். அதை அகற்றினார். அப்போது எம்.ஜி.ஆர். சொன்னதைத்தான் இப்போது ரஜினி சொல்கிறார்.
ஒருவர் தொடங்கும்போது பரவலாக கட்சியை உருவாக்கும் வலிமை இருக்குமானால் அவரால் இந்த கட்சிகளைஅகற்றிவிட முடியும். அப்படி வந்தவர்தான் எம்.ஜி.ஆர். அதே மாதிரி வலிமை ரஜினிக்கு இருக்கிறது. கடைக்கோடி தமிழனுக்கு அவர் கருத்து சென்று சேரும்.

எம்.ஜி.ஆர். காங்கிரசை அகற்றியதுபோல் ரஜினியால் திமுக, அதிமுகவை அகற்றிவிட முடியும். அகற்றிவிட்டு அவர் ஒரு நல்ல கொள்கை சொல்கிறார். சிஷ்டம் சரியில்லை என்ற ஒன்று போதும்.

ஊழலை ஒழித்துக்காட்டுகிறேன். மூன்று வருடம் டைம் கொடுங்க. முடியாவிட்டால் ஆட்சியை விட்டு போய்விடுகிறேன் என்று சொல்கிறார். அவரின் உறுதியான பேச்சில் ஒரு நம்பகத்தன்மை இருக்கிறது. அதிலே அவர் தோற்றுப்போனால் கூட பரவாயில்லை. அது ஒரு வரலாற்று சாதனை. அப்படி அது முடியாமல் போன அந்த பிழை அவர் மேல் விழாது. இந்த அளவுக்கு மோசமான ஊழல் இருக்கிறது என்று வரலாற்றில் பதிவாகும்.

ஆனால், ரஜினி ஒரு தவறு செய்கிறார். தான் பதவியில் இருக்க மாட்டேன் என்கிறார். அது தவறு. செல்வாக்கு உள்ளவர்கள்தான் பதவியில் இருக்க வேண்டும். இல்லையென்றால் அது இஸ்டத்திற்கு போய்விடும்.

ரஜினி கவர்ச்சியை நம்பவில்லை. கவர்ச்சி சினிமாவுக்கு வேண்டும். அரசியலுக்கு தேவையில்லை. நான் ரஜினியை நிறைய முறை சந்தித்திருக்கிறேன். ரொம்ப எளிமையான மனிதர். சினிமாவுக்கு உரிய எந்த பந்தாவும் இல்லாமல் இருப்பார். தாடி வைத்துக்கொண்டிருப்பார். நரைமுடியுடன் இருப்பார். வலுக்கை தலையை மறைக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்.
எம்.ஜி.ஆர். கூட தொப்பி வைத்து மறைத்துக்கொண்டார்.

ஜெயலலிதாவோ, காலையில் ஹேர் டிரஸ்ஸர், மேக்கப் மேன் வரவில்லை என்றால் யாரையும் பார்க்க மாட்டார். ஏனென்றால் அதுவெல்லாம் சினிமாவின் தாக்கம். அந்த தாக்கம் இல்லாதவராக ரஜினி இருக்கிறார். அதுவே ஒரு சிறப்புதான். அதைப்பற்றிய பேச்சே இப்போது அவசியமில்லை. 50 ஆண்டுகளால திராவிட கட்சிகளின் ஊழலை ஒழித்துக்கட்ட வேண்டும். அதுதான் அவசியம்’’என்றார் உறுதியாக.

மாவட்ட செய்திகள்

Most Popular

எம்.எஸ்.பி.யை காட்டிலும் குறைந்த விலைக்கு பயிர்களை விற்பனை செய்யும் விவசாயிகள்.. பிரியங்கா காந்தி வேதனை

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்.எஸ்.பி.) தற்போது உத்தரவாதம் உள்ளபோதிலும், அதனை காட்டிலும் குறைந்த விலைக்கு தங்களது பயிர்களை விற்க விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என பிரியங்கா காந்தி வேதனை மற்றும் குற்றம்...

மீண்டும் காங்கிரசில் அதிரடி மாற்றங்கள்…. பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவதற்காக காத்திருக்கும் சோனியா காந்தி…

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு, காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஒரு மறுசீரமைப்பை சோனியா காந்தி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில்...

நாட்டின் விவசாயிகளின் விருப்பத்தை குடியரசு தலைவரால் நிராகரிக்க முடியாது… பஞ்சாப் முதல்வர் நம்பிக்கை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை தனது மாநிலத்தில் அமல்படுத்துவதை...

என்கவுண்டரில் 127 பேர் அவுட்… குற்றம் மற்றும் குற்றவாளிகளை அரசு சகித்து கொள்ளாது.. யோகி ஆதித்யநாத்

அரசாங்கம் குற்றம் மற்றும் குற்றவாளிகளை சகித்து கொள்ளாத கொள்கையை கொண்டுள்ளது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 1959ம் ஆண்டில் லடாக்கின் ஹாட்...
Do NOT follow this link or you will be banned from the site!