மு.க.ஸ்டாலினின் அக்கரைப் பச்சை பார்வை

 

மு.க.ஸ்டாலினின் அக்கரைப் பச்சை பார்வை

எந்த ஒரு மாநிலம் 5 சதவீதத்திற்கும் கீழாக பாதிக்கப்பட்டுள்ளதோ அம்மாநிலம் கொரோனாவை கட்டுக்குள் வைத்துள்ளது என அர்த்தம் என கூறுகின்றனர் உலக ஆராய்ச்சியாளர்கள்.

அப்படி பார்க்கும்போது, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் 4.95% உள்ளது. இதன் மூலம் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதலில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னோடியாக இருக்கிறது என்கிற கருத்து எழுந்திருகிறது. திட்டங்களை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் முன்னோடியாக உள்ளது என்றும் பேச்சு இருக்கிறது.

மு.க.ஸ்டாலினின் அக்கரைப் பச்சை பார்வை

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய நகரங்கள், அதிக ஊழியர்கள் வேலை செய்யும் இடங்கள், பொது இடங்களில் மருத்துவ மூகாம்களை நடத்த உள்ளது அரசு. தமிழகத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே RT-PCR பரிசோதனை செய்வதில், தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் முதன்முதலாக சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டன. தொடர்ந்து இங்கு சிறப்பான தனிமைப்படுத்துதலுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயேயே சிறந்த மருத்துவமனை என விருது பெற்ற அரசு ஓமந்தூரார் மருத்துவமனை 90% நுரையீரல் பாதிப்புடைந்தவர்களையும் கொரோனாவிலிருந்து குணப்படுத்தி சாதனை படைத்துள்ளது.

அம்மா ‘கோவிட்-19’ வீட்டு பராமரிப்பு திட்டத்தில் முதல் நிலை நோயாளிகள் வீட்டில் இருந்து சிகிச்சை பெறும் வசதி, நடமாடும் கொரோனா பரிசோதனை, வீடுகளில் சென்று நேரடியாக உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல், கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் கொரோனாவை தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

மு.க.ஸ்டாலினின் அக்கரைப் பச்சை பார்வை

கொரோனா நோயாளிகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைட்டமின் நிறைந்த உணவுகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அளவிற்கு அக்கறையுடன் செயல்பட்டு வரும்போது, அக்கரை பச்சையாக
எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் கேரளாவுடன் தமிழகத்தை ஒப்பிட்டு வருகிறார். ஆனால், கேரளாவில் கடந்த 12 நாட்களில் புதிதாக தினசரி நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், ஸ்டாலினின் அக்கரை பச்சை பார்வையினை அவரது கட்சியினரே விமர்சிக்கிறார்கள்.