மதியச் சாதத்துடன் ‘காளான் முட்டை மசாலா’ சாப்பிடுங்க

 

மதியச் சாதத்துடன் ‘காளான் முட்டை மசாலா’ சாப்பிடுங்க

காளானில் புரதம், தாயமின், நியாசின், வைட்டமின் சி, வைட்டமின் டி ,பொட்டாசியம் மாங்கனிசு, கால்சியம், பாஸ்பரஸ் எனப் பல சத்துக்கள் உள்ளன.காளான் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

மதியச் சாதத்துடன் ‘காளான் முட்டை மசாலா’ சாப்பிடுங்க

இதே போல் கோழி முட்டையில் புரதம், வைட்டமின்கள், இரும்புச்சத்து , கால்சியம், போலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் உள்ளது. முட்டை சாப்பிடுவதால் பற்கள், எலும்புகள், தசைகள் பலம் பெறுகின்றன.முட்டையின் வெள்ளைக்கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. இப்பொழுது இந்த இரண்டையும் சேர்த்து ஒரு ருசியான, சத்தான “காளான் முட்டை மசாலா”சமையல் குறிப்பைப் பார்க்கலாம்.

தேவை: 1 கப் காளான், முட்டை-1, பல்லாரி 1,பட்டை1, மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி, தனியா தூள் 1 தேக்கரண்டி, தக்காளி-1, கிராம்பு-2, சோம்பு அரை ஸ்பூன், பூண்டு 2 பல், கொத்தமல்லி சிறிதளவு

மதியச் சாதத்துடன் ‘காளான் முட்டை மசாலா’ சாப்பிடுங்க


செய்முறை: காளானை நன்றாக கழுவி சிறு,சிறு துண்டுகளாக வெட்டவும். பல்லாரி, கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கவும். பூண்டை சிறியதாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்து, பின்னர் பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.. தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். மசாலா பச்சை வாசனை போனதும் காளான் சேர்த்து லேசாக வதக்கவும். காளான் நன்கு வெந்த பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

ஆர்.சுபாஷ் சந்திரபோஸ்