Home அரசியல் தூசி தட்டிய இன்ஸ்பெக்டர்! தூக்கி அடித்த துரைமுருகன்!

தூசி தட்டிய இன்ஸ்பெக்டர்! தூக்கி அடித்த துரைமுருகன்!

கிடப்பில் கிடந்த கதிர் ஆனந்த் வீட்டில் பல கோடி ரூபாய் பணம் கைப்பற்ற வழக்கினை தூசி தட்டி எடுத்து, சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நினைத்த புதிய இன்ஸ்பெக்டர் நிவாஸினை தனது செல்வாக்கினால் திருமவண்ணாமலைக்கு தூக்கியடித்துவிட்டார் துரைமுருகன் என்று பரபரப்பாக பேசிக்கொள்கின்றன்றர் காட்பாடி மக்கள்.

மக்களைவை தேர்தலின் போது வேலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கட்டுக்கட்டாக வீட்டுக்குள் பணம் வைத்திருக்கிறார் என்ற சென்ற புகாரின் பேரில் கதிர் ஆன்ந்தின் வீடு மற்றும் அலுவலங்களில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோனையில் 11 கோடி ரூபாய் பணம் பிடிபட்டது. இதில் 9 கோடி ரூபாயும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஆகும். இதனால் வேலூர் மக்களவை தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.


இதையடுத்து தேர்தல் செலவுக்கணக்கு அதிகாரி முத்து சிலுப்பன் கொத்த புகாரின் அடிப்படையில், கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவான் உள்ளிட்டோர் மீது காட்பாடி காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து வேலூர் தொகுதிக்கு மீண்டும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதால், அந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், காட்பாடி காவல்நிலையத்திற்கு புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் இந்த வழக்கினை தூசி தட்டி எடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசனை செய்து வந்திருக்கிறார்.

தலைவலி தீர்ந்தது என்று பார்த்தால் மீண்டும் குடைச்சல் தருகிறார்களே என்று கடுப்பான துரைமுருகன் தனது செல்வாக்கை வைத்து இருபதே நாட்களில் இன்ஸ்பெக்டர் நிவாஸ்திருவண்ணாமலைக்கு மாற்றிவிட்டார் என்று காட்பாடி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றார்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” : நடிகை குஷ்பு

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என நடிகையும் பாஜக ஆதரவாளருமான நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு நேரில் ஆறுதல்...

திண்டுக்கல்- கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு

திண்டுக்கல் மத்திய அரசின் ஜல்ஜீவன் குடிநீர் திட்ட கட்டணத்தை 3 ஆயிரத்தில் இருந்து ஆயிரம் ரூபாயாக குறைக்க வலியுறுத்தி நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட்...

இளைஞனை நண்பர்களே பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்!

மதுரை அருகே மது போதையில் ஒரு இளைஞரை அவரது நண்பர்களே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் கூலபாண்டி...

சேலம்- ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து இரு குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி

சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை...
Do NOT follow this link or you will be banned from the site!