காலையில் இடியாப்பத்துடன் ‘ஆட்டுக் குடல் வறுவல்’சாப்பிடுங்க

 

காலையில் இடியாப்பத்துடன் ‘ஆட்டுக் குடல் வறுவல்’சாப்பிடுங்க

ஆட்டுக்கறியில் வைட்டமின்கள் B1, B2, B3, B9, B12,வைட்டமின் E, வைட்டமின் K, கோலைன், புரோட்டீன், அமினோ அமிலங்கள், மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் இப்படி ஏராளமான சத்துக்கள் இருக்கிறது
ஆட்டுக்கறி சிறுநீரக சுரப்பியை வலிமை அடையச் செய்யும்.உடல் சூட்டை தணிக்கும். ஆட்டு குடல் மனிதக் குடலுக்கு வலுவைத் தரும். வயிற்று புண்களைப் போக்கும். தாது விருத்தி உண்டாக்கும். ஒட்டு மொத்த உடலுக்கும் பலம் சேர்க்கும்.இப்போது ஆட்டுக் குடல் வறுவல் எப்படிச் செய்வது எனப் பார்க்கலாம்.

காலையில் இடியாப்பத்துடன் ‘ஆட்டுக் குடல் வறுவல்’சாப்பிடுங்க

தேவை: ஆட்டுக்குடல் – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 50 கிராம். மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி. சீரகத்தூள் – 1 தேக்கரண்டி, மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி, மிளகு – கால் தேக்கரண்டி. சீரகம் – அரை தேக்கரண்டி. சோம்பு – கால் தேக்கரண்டி, பச்சை மிளகாய் – 1, எண்ணெய் – 2 தேக்கரண்டி. பட்டை – சிறிய துண்டு.கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு பேஸ்ட், உப்பு – சிறிதளவு.
செய்முறை: முதலில் ஆட்டுக் குடலை தண்னீரில் சுத்தம் செய்யவும். பின்னர் வென்னீரில் ஒரு மணி நேரம் கொதிக்க வைத்தபிறகு மீண்டும் சுத்தப்படுத்தவும்.

காலையில் இடியாப்பத்துடன் ‘ஆட்டுக் குடல் வறுவல்’சாப்பிடுங்க

இஞ்சி – பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைத்தபிறகு வெந்த குடலை தனியாக எடுத்து வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் கால் தேக்கரண்டி சீரகம் மற்றும் மிளகைச் சேர்த்து மென்மையாக வறுத்து தட்டி வைக்கவும்.

காலையில் இடியாப்பத்துடன் ‘ஆட்டுக் குடல் வறுவல்’சாப்பிடுங்க

வறுத்தால்தான் குடல் வறுவல் மணமாக இருக்கும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், லேசாகத் தட்டிய சோம்பு, பட்டை, பச்சை மிளகாய், மீதமிருக்கும் சீரகம், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, சீரகத்தூளையும் சேர்த்து நன்கு வதக்கி, இதனுடன் வேக வைத்த குடல் சேர்த்து பிரட்ட வேண்டும் மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் மட்டும் வதக்கவும். பிறகு தட்டி வைத்துள்ள மிளகு, சீரகம் சேர்த்து கிளறி இறக்கவும். காலையில் இடியாப்பத்துடன் இந்த ஆட்டுக்குடல் வறுவலை சாப்பிட்டால் உடலுக்கும் நல்லது…வாய்க்கும் ருசியானது.

ஆர்.சுபாஷ் சந்திரபோஸ்