இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா? தமிழினத்திற்கு எதிரானவன் போல் சித்தரிப்பதா? : முத்தையா முரளிதரனின் மூன்று பக்க பரபரப்பு அறிக்கை

இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா? தமிழினத்திற்கு எதிரானவன் போல் சித்தரிப்பதா? : முத்தையா முரளிதரனின் மூன்று பக்க பரபரப்பு அறிக்கை

தமிழர்களின் உணர்வுகளை மதிக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் 800 வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என்று கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அவர் அப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார். இந்நிலையில், அப்படம் திரைக்கு வந்தால் தமிழகத்தில் எத்தனை எதிர்ப்புகள் இருக்கும் என்று இப்போதே தெரிகிறது.

இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா? தமிழினத்திற்கு எதிரானவன் போல் சித்தரிப்பதா? : முத்தையா முரளிதரனின் மூன்று பக்க பரபரப்பு அறிக்கை

இந்நிலையில், முத்தையா முரளிதரன் மூன்று பக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், இலங்கை தமிழராக பிறந்தது என் தவறா? என்று கேட்டு, தமிழினத்திற்கு எதிரான நான் சித்தரிக்கப்படுகிறேன் என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.

இது நாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான திரைப்படத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுத்தில் நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூறவிரும்புகிறேன்.

என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அனுகிய போது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா மூவி நானாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லை என்பதால் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்தும் ஆசிரியர் , எனது பயிற்சியாளர்கள் சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.

இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா? தமிழினத்திற்கு எதிரானவன் போல் சித்தரிப்பதா? : முத்தையா முரளிதரனின் மூன்று பக்க பரபரப்பு அறிக்கை

இலங்கையில் தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவளியான மலையக தமிழர்கள் தான். இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு, தேவி போராட்டத்தில் நடந்த வன்முறை பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்.

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். என் சொந்தங்களில் பயர் பலியாகினர், வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில் நின்றிருக்கிறார். ஆதலால் போர் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கும் தெரியும். முப்பது வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை அதன் மத்தியிலேயேதான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சாதித்தேன் என்பது பற்றியான படம் தான் 100.

இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா? தமிழினத்திற்கு எதிரானவன் போல் சித்தரிப்பதா? : முத்தையா முரளிதரனின் மூன்று பக்க பரபரப்பு அறிக்கை

இப்போது பல்வேறு காரணங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் நான் பேசிய சில கருத்துகள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவுதான். உதாரணமாக நான் 2009ம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் மிகமகிழ்ச்சியான நாள் என்று 2019ல் கூறியதை தமிழர்க்ளை கொன்று குறித்த நாள்தான் முத்தையா முரளிதரைனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என திரித்து எழுதுகிறார்கள்.