நவராத்திரி முதல் நாள்: சத்ரு தொல்லையை போக்கும் சைலபுத்ரி!

 

நவராத்திரி முதல் நாள்:  சத்ரு தொல்லையை போக்கும் சைலபுத்ரி!

நவராத்திரி ஒன்பது நாட்களுக்கும் ஒவ்வொரு துர்க்கையாக நவ துர்க்கையையும் வணங்குவதே வழக்கம். நவராத்திரின் முதல் நாளில் சத்ரு தொல்லையையும் கடனையும் போக்கும் சைலபுத்ரி தேவியை வணங்க வேண்டும். துர்க்கையானவள், தன்னைச் சார்ந்துள்ளவர்களைப் பாதுகாக்கும் தேவியாகவும், வேண்டியதை வாரி வழங்கும் தாயாகவும், சித்தர்களுக்கு தலைவியாகவும், சிவப்பெருமானின் காதலியாகவும், விஷ்ணுவின் மாயையாகவும், பரிபூர்ண பிரம்மா ஸ்வரூபிணியாகவும், பசி, தாகம், சோம்பல், ஒளி, பொறுமை, பிரேமை, ஞானம், தயை, எண்ணம், மகிழ்ச்சி, செல்வம், வீரம், மாயை முதலியவற்றின் அதிதேவதையாக தூர்க்காதேவியே விளங்குகிறாள்.

நவராத்திரி முதல் நாள்:  சத்ரு தொல்லையை போக்கும் சைலபுத்ரி!

ஸ்ரீ துர்க்கா தேவியின் முதல் அவதாரமான சைலபுத்ரி துர்க்கையை வழிபடுவது வழக்கம். சைலபுத்ரி என்பது சைலம் – மலை, புத்ரி -மகள். அதாவது மலைமகள் என்று பொருள். மலை அரசனான இமவானின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன. இமவானின் மகளாக உள்ளதால் ஹேமாவதி என்ற பெயரும் இவளுக்கு உண்டு. இவளின் முன் அவதாரத்தில் இவள் தட்சனின் மகளாக பிறந்ததால் ‘தாட்சாயினி’ என்றும் கூறுவர். இவளே பார்வதியாகப் பிறந்து மகாதேவனை மணந்துக் கொண்டாள்.

ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரமாகவும், மூலாதாரமாகவும் விளங்குகின்றார். யோகிகள் தங்களுடைய யோக சாதனைகளை இவளை வணங்கியே துவங்குவர். அதனால் இவளே முதல் சக்தியாகப் போற்றப்படுகிறாள். இவரின் வாகனம் நந்தியாகவும், ஆயுதம் சூலத்தையும் ஏந்தி நிற்கிறாள்.

மந்திரம் :
வந்தே வாஞ்சித் லாபாய சந்திர கிருத சேகரம்
விருஷபாருடம் சூலதாரிநீம் ஷைல புத்ரீம் யஷஷ்விநீம்

விருஷபம் என்றால் நந்தி என்று பொருள். அதனால், நந்தியின் மேல் ஏறி வருபவளும், சூலத்தை ஆயுதமாக கொண்டவளும், மூன்றாம் பிறையைத் தன்னுடைய கிரீடமாகக் கொண்டவளும், பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரும் யஷஷ்வின்யாம் சைல புத்ரி தேவியை வணங்குகின்றேன்
என்று அர்த்தமாகும்.

நவராத்திரி முதல் நாள்:  சத்ரு தொல்லையை போக்கும் சைலபுத்ரி!

நவராத்திரி சனிக்கிழமை தொடங்குவதால் சனிப்பகவானுக்கு உரிய ரத்தினமான நீலத்திலிருத்திலிருந்து பாடல் பாடத் தொடங்கி அம்பிகையை வணங்கலாம்.

மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
நீலத்திருமேனியலே நினைவாய்.
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே..

என பாடல் பாடி வணக்குவது நலம் பயக்கும்.