பூஜை அறையை அழகாக்க டிப்ஸ்…!

 

பூஜை அறையை அழகாக்க டிப்ஸ்…!

கடவுளை வணங்கிய பிறகே அன்றாட வேலைகளை தொடங்குவது நம் மரபு. அந்தளவுக்கு நம் உணர்வுகளோடு கலந்த கடவுள் குடிக்கொண்டிருக்கும் பூஜை அறையில் நாம் தினமும் பூஜை செய்வதன் மூலம், நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன், சூழலும், அமைதியும், மகிழ்ச்சியும், சந்தோஷமும் தருவதாக அமைகிறது.

அது, சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி, குடியிருக்கும் வீட்டையே கோயிலாக நினைத்து, நாம் ஒவ்வொருவரும் வசதிக்கேற்ப பூஜையறையையோ, இடமில்லையென்றால் சமையலறையில் உள்ள செல்ஃப்பையோ அமைத்துக்கொள்வோம்.

பூஜை அறையை அழகாக்க டிப்ஸ்…!

முதலில் கடவுளை வணங்கும் பூஜையறை எப்போதும் அமைதியை தவழும் இடமாகவும், சுத்தம் நிறைந்த விதமாகவும் இருப்பது மிகவும் நல்லது. பூஜையறையை அல்லது சமையலறை செல்ஃப்பை இன்னும் எப்படி அழகாக பயன்படுத்தி கடவுளை வணங்கலாம் என்று பார்ப்போம்.

சிலரது வீடுகளில் பூஜை அறை படுக்கையறையிலும், சமையலறையிலும் பூஜை அறை இருக்கும். பூஜை நடைபெறாத சமயங்களில் அந்த அறையைத் திரையிட்டு மறைத்துவிட்டால் பார்ப்பதற்கு அழகாகவும், எந்தவித தோஷங்களும் அண்டாது.

பூஜை அறையின் சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இளமஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருந்தால், தீபம் ஏற்றி வழிபடும்போது பார்ப்பதற்கு மிக ரம்மியாகவும், ஒளி பிரகாசமாகவும் இருக்கும்.
பூஜை அறையில் தேவையற்ற பொருட்களை வைத்து இடத்தை அடைக்காமல், பூஜைக்குப் பயன்படுத்தும் பொருள்களைப் பூஜை அறையிலேயே வைத்தால், பார்ப்பதற்கு அழகாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கும்.

பூஜை செய்யும் முன்னர் சந்தனம், பன்னீர் தெளிப்பதன் மூலம் பூஜை அறையில் நறுமணம் வீசுவதோடு, தெய்வீக சக்தியைப் பெருக்கும். பூஜை அறையின் வாசலில் மகாலட்சுமியையும், விநாயகரையும் வரவேற்கும் தோரணங்களால் அலங்கரித்தால், வீட்டிற்கு வண்ணமிகுதி தோற்றத்தைத் தரும்.

பூஜை அறையை அழகாக்க டிப்ஸ்…!

சுவாமி படங்களை அலங்கரிக்க வாங்கும் ரோஜா, சாமந்தி பூக்களை வாங்கும் போது சில பூக்கள் காம்பில்லாமல் இருக்கலாம். அதில் எரிந்த ஊதுவத்தி குச்சியை அதன் நடுவில் செருகி படத்திற்கு வைக்கலாம்.

கோலம் என்பது தெய்வீக அருளை தரக்கூடியது. பூஜை அறையில், பச்சரிசி மாவைக் எலுமிச்சம் பழம் ஜூஸ் பிழியும் கருவியில் போட்டு தரையில் தட்ட, ஒரே மாதிரியான அழகிய சிறு கோலங்களை உங்களுக்கு பிடித்தமாதிரி போடலாம். பிறகு, அதன்மேல் வண்ண பூக்களால் அலங்கரிக்கலாம். அல்லது வெண்மை நிற பெயிண்ட் கொண்டு கோலம் போடலாம். இது நீண்ட நாள் நிலைத்து இருக்கும்.

அழகு முருகப்பெருமானின் வாகனமான மயிலின் மயிலிறகை பூஜையறையில் ஒட்டினால் பல்லி தொல்லை இருக்காது. மேலும் தேவதைகளை ஆகர்ஷணம் செய்யும் சக்தி மயிலிறகிற்கு உண்டு.
பூஜையறை விளக்கை எண்ணெய் இல்லாமல் தானாகவே அணையவிடக்கூடாது. பூஜை முடிந்த பின் சிறிது நேரம் கழித்து, பூவால் விளக்கை குளிர்விக்க வேண்டும்.