மீண்டும் உண்மையைச்சொல்லி சிக்கிக்கொண்ட துரைமுருகன்!

 

மீண்டும் உண்மையைச்சொல்லி சிக்கிக்கொண்ட துரைமுருகன்!

பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு தனது பேச்சு, நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டுவிட்டதாக வாய்வார்த்தைக்கு துரைமுருகன் சொன்னாலும் நிஜத்தில் இன்னும் மாறவில்லை என்பதையே இப்போது நடந்திருக்கும் விவகாரமும் சொல்கிறது.

கூட்டணியில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம். அப்போதுதான் எவன் எவன் எங்கிருக்கிறான் என தெரிய வரும் என்று கூட்டியிணினரை சூடாக்கி விட்டு, அதனால் ஸ்டாலினையும் கடுப்பாக்கி, பின்னர் மாஸ்க்கை வைத்து அந்த பிரச்சனையை சமாளித்தார். இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை எதை வைத்து சமாளிக்கப்போகிறாரோ தெரியவில்லை.

மீண்டும் உண்மையைச்சொல்லி சிக்கிக்கொண்ட துரைமுருகன்!

அண்மையில் வேலூரில் நடந்த கிராம சபைக் கூட்டத்தின் முடிவில், பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கூட்டணி குறித்த கேள்விக்கு, கூட்டணியில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம். அப்போதுதான் எவன் எவன் எங்கிருக்கிறான் என தெரிய வரும் என்றார் துரைமுருகன். எவன் எவன் என்று கூட்டணிக் கட்சியினரை, ஒருமையில் பேசிய விவகாரம் பெரிதானதும், ‘’என்னை சந்தித்த செய்தியாளர்கள், தி.மு.க. கூட்டணியில் யார், யார் இருப்பார்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார்கள். அதற்கு, இப்பொழுது எதையும் அறுதியிட்டு, இறுதியிட்டு சொல்ல முடியாது. தேர்தல் காலங்களில் இறுதி நேரத்தில்கூட, கட்சிகள் இடம் மாறுவது உண்டு. அப்படி, இங்கே இருப்பவர்கள் அங்கே போவதும், அங்கே இருப்பவர்கள் இங்கே வருவதுங்கூட கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கிறது என்றுதான் நான் கூறினேன்.

மீண்டும் உண்மையைச்சொல்லி சிக்கிக்கொண்ட துரைமுருகன்!

வாயில், ‘மாஸ்க்’ அணிந்து பேசிக் கொண்டிருந்த காரணத்தால், சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்கலாம். அதனை நான் ஒருமையில் பேசியதாக சில பத்திரிகைகள் வெளியிட்டிருக்கின்றன’’என்றார். மேலும், ’’ நான் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, எனது பேச்சு மற்றும் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டிருக்கிறேன். இனி இப்படி நிகழா வண்ணம் நானும் நடந்து கொள்வேன்” என்று சொல்லி இருந்தார்.

அவர் அப்படி சொல்லி ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் மீண்டும் கூட்டணி குறித்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.
வார இதழுக்கு அளித்த பேட்டியொன்றில், திமுக கூட்டணியில் மாற்றம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, ‘’எங்கள் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்களோ அவர்கள் அப்படியே இருப்பார்கள் என்றுதான் இப்போதைக்கு சொல்ல முடியும்’’ என்று கூறியிருக்கிறார்.

மீண்டும் உண்மையைச்சொல்லி சிக்கிக்கொண்ட துரைமுருகன்!

கூட்டணியில் இருக்கும் கட்சிகள் நிரந்தரமாக இருக்குமா? இல்லையா? என்பது ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் கணிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், ஒப்புக்காக தலைவர்கள் இந்த கூட்டணியை உடைக்க முடியாது என்றுதான் சொல்லிவருவார்கள்.

ஆனால், பொதுச்செயலாளராக இருந்தும் இந்த உண்மையை மறைக்க நினைக்காமல் பொதுவெளியில் போட்டு உடைத்திருப்பது திமுகவினரிடையேயும், கூட்டணியினரிடையே மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மாறுவேன் என்று சொன்னாலும் அவரால் இயல்பை மாற்றிகொள்ள முடியவில்லை. போன முறை மாஸ்க்கை வைத்து எஸ்கேப் ஆன துரைமுருகன், இந்த முறை என்ன சொல்லி எஸ்கேப் ஆக போகிறாரோ?