கட்டம் கட்டப்பட்ட பிரசாந்த் கிஷோர்! கொண்டாடும் தமிழக வி.ஐ.பிக்கள்!

 

கட்டம் கட்டப்பட்ட பிரசாந்த் கிஷோர்! கொண்டாடும் தமிழக வி.ஐ.பிக்கள்!

இந்திய அளவில் பல்வேறு கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகராக இருக்கும் ’ஐ பேக்’பிரசாந்த் கிஷோர் வருமான வரி்த்துறையினரால் கட்டம் கட்டப்பட்டிருப்பதால் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் தமிழக விஐபிக்கள்.

நரேந்திரமோடி, அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு தேர்தல் பணி செய்த பிரசாந்த் கிஷோர் திமுகவுக்காக இந்த முறை தேர்தல் பணி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அண்மைக்காலங்களாக திமுகவின் நடவடிக்கைகள் அனைத்துக்கும் காரணம் பிரசாந்த் கிஷோர்தான் என்கிறார்கள்.

கட்டம் கட்டப்பட்ட பிரசாந்த் கிஷோர்! கொண்டாடும் தமிழக வி.ஐ.பிக்கள்!

எப்பாடு பட்டாவது ஆட்சியை பிடித்துவிட மாட்டோமா என்ற கனவில் இருக்கும் ஸ்டாலின், பிரசாந்த் கிஷோரைத்தான் முழுக்க முழுக்க நம்பி இருக்கிறார்.
திமுகவின் தேர்தல் பணிகளுக்காக பிரசாந்த் கிஷோரும் சென்னை அண்ணாநகரில் தனது ஐபேக் குழுவை அமர்த்தி இருக்கிறார்.

இந்நிலையில், சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த டி.ராமாராவ், ஆர்.முருகேசன் இருவரும், பிரசாந்த் கிஷோர் வரி ஏய்ப்பு செய்ததாக டெல்லியில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இயக்குநர் ஜெனரல் அலுவலகத்திற்கு புகார் அனுப்பி இருக்கிறார்கள். இதையடுத்து டெல்லி அலுவலகம், சென்னையில் உள்ள வருமான வரி புலனாய்வு துறைக்கு புகாரினை அனுப்பி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறது. இதன்பேரில், பிரசாந்த் கிஷோரிடம் அதிகாரிகள் விரைவில் விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

கட்டம் கட்டப்பட்ட பிரசாந்த் கிஷோர்! கொண்டாடும் தமிழக வி.ஐ.பிக்கள்!

இதனால், திமுகவின் தேர்தலில் பணிகளை முடக்கிப்போடும் எண்ணத்தில் பாஜக இந்த சதி வேலையை செய்கிறது என்று திமுகவின் தலைமை ஆவேசப்பட்டு வருகிறதாம். ஆனால், கட்சியின் சீனியர்கள் பலரும் இதை கொண்டாடுகிறார்களாம்.

பிரசாந்த் கிஷோருக்கு ஸ்டாலின் முழு அதிகாரம் கொடுத்திருப்பதால், அவர் சுதந்திரமாக கட்சிக்குள் புகுந்து வருவதால் சீனியர்களை புலம்பி கிடக்கிறார்கள். தேர்தலில் யாருக்கெல்லாம் சீட் கொடுக்கலாம் என்று அவர் தயாரித்து வரும் லிஸ்ட்டினால், சீனியர்கள் பலரும் களக்கத்தில் இருக்கிறார்கள்.
கறைபடிந்தவர்களை கரையேற்றிவிட்டு நீச்சல் அடிக்க தகுதியானவர்கள் என்று அவர் தயாரிக்கும் லிஸ்ட்டினை ஓரளவுக்கு கணித்து கடுப்பாகி கிடக்கிறார்கள் திமுக சீனியர்கள்.

அந்த விஐபிக்கள் எல்லாரும் இப்போது வருமான வரித்துறையினரால் பிரசாந்த் கிஷோர் கட்டப்பட்டிருப்பதால் கொண்டாடித்தீர்க்கின்றனர்.