அன்புச்செழி்யன் விவகாரம்: தயாரிப்பாளர் சி.வி.குமாரிடம் ஐ.டி அதிகாரிகள் விசாரணை

 

அன்புச்செழி்யன் விவகாரம்: தயாரிப்பாளர் சி.வி.குமாரிடம் ஐ.டி அதிகாரிகள் விசாரணை

திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில், தயாரிப்பாளர் சி.வி. குமாரிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

தமிழ் திரையுலகின் பெரும் பைனான்சியர் அன்புச்செழியன். மதுரையை பூர்விகமாக கொண்ட அன்புச்செழியன் ’கோபுரம் பிலிம்ஸ்’ நிறுவனம் மூலமாக திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார்.

அன்புச்செழி்யன் விவகாரம்: தயாரிப்பாளர் சி.வி.குமாரிடம் ஐ.டி அதிகாரிகள் விசாரணை

தமிழ் சினிமாக்களையும் இவரையும் பிரிக்க முடியாது என்கிற அளவுக்கு வாரி வாரி பைனான்ஸ் வழங்கும் இவர், வசூலிப்பதில் ரொம்பவே கறார் பேர்வழி என்கிறார்கள். அதனால்தான், 2003 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரனின் தற்கொலைக்கு காரணமானார் என்கிறார்கள். நடிகர் சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலைக்கும் அன்புச்செழியன் தான் காரணம் என்கிறது திரையுலகம்.

அன்புச்செழி்யன் விவகாரம்: தயாரிப்பாளர் சி.வி.குமாரிடம் ஐ.டி அதிகாரிகள் விசாரணை

ஆனாலும், தமிழ் சினிமாவின் முன்னணி படங்களுக்கு தொடர்ந்து பைனான்ஸ் செய்து வரும் அன்புச்செழியன் சென்னை, மதுரையில் உள்ள அலுவலகங்கள் மற்றும் வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நான்கு நாட்கள் நடந்த இந்த சோதனையில் அன்புச்செழியன் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக 77 கோடி ரூபாய் பணமும், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

அந்த ஆவணங்களின் அடிப்படையில், பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திலும், நடிகர் விஜய் வீட்டிலும் வருமான வரித்துறையினர் முன்னர் சோதனை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், அன்புச்செழியன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில் தயாரிப்பாளர் சி.வி. குமாரிடம் நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.