ரஜினி ரசிகருக்கு ஜோதிமணி எம்.பி. கொடுத்த பதிலடி

 

ரஜினி ரசிகருக்கு ஜோதிமணி எம்.பி. கொடுத்த பதிலடி

கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தின் பெயரில் சொத்து வரி பாக்கி உள்ளது என்றும், கடந்த மார்ச் மாதம் அக்டோபர் மாதம் வரையிலான பாக்கித்தொகை 6.50 லட்ச ரூபாயினை கட்ட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது.


இதையடுத்து, ராகவேந்திரா திருமண மண்டப நிர்வாகத்தின் சார்பில், கொரோனா ஊரடங்கினால் மார்ச் 24ஆம் தேதி முதல் மண்டபத்தில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறாததால் வருமானம் இல்லை. ஆகவே, இந்த காலகட்டத்திற்கு சொத்து வரி கேட்டு நிர்ப்பந்திக்க கூடாது என்று சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ரஜினி ரசிகருக்கு ஜோதிமணி எம்.பி. கொடுத்த பதிலடி

ஒரு வாரம் ஆகியும் மாநகராட்சியிடம் இருந்து பதில் வராததால் உயர்நீதிமன்றத்தில் ரஜினி சார்பில் முறையீடு செய்யப்பட்டது.

ஒரு வாரத்திற்குள் அப்படி என்ன அவசரம் என்று எச்சரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருள் ஆனது. ரஜினி செய்தது சரி என்றும் தவறும் என்றும் இரு தரப்பினரும் சூடாக விவாதம் செய்து வந்தனர்.

ரஜினி ரசிகருக்கு ஜோதிமணி எம்.பி. கொடுத்த பதிலடி

நீதிமன்றம் மட்டும் ரஜினிக்கு ஆதரவாக செயல்பட்டிரு்ந்தால் நிலைமை விபரீதமாக ஆகி்யிருக்கும். கொரொனா ஊடரங்கினால் வருமானம் இழந்த அத்தனை பேரும் வரி தள்ளுபடி கேட்டு வரிசையில் நின்றிருப்பார்கள் என்று பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

ரஜினி ரசிகருக்கு ஜோதிமணி எம்.பி. கொடுத்த பதிலடி

விவகாரம் இப்படி பெரிதாகிக்கொண்டிருந்த நிலையில், வரி பாக்கியை ரஜினி செலுத்தியதற்கான பில் இணையத்தில் பரவியது.

இந்த நிலையில் கரூர் எம்.பி. ஜோதிமணி, ‘’கோடிஸ்வரர்களின் சொத்துக்கெல்லாம் வரி போடறாங்க. அதை எதிர்த்து நீதிமன்றம் போனால் அங்கே எச்சரிச்சு அனுப்பறாங்க.சிஸ்டம் சரியில்லை.’’என்று தனது கமெண்ட்டை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரஜினி ரசிகர்கள் அவரை பிடி பிடி என்று பிடித்துக்கொண்டார்கள்.

அவர் நீதிமன்றத்திற்கு வாய்தா வாங்க செல்லவில்லை உரிமைக்காக சென்றுள்ளார். உங்கள் கட்சி தலைவர் குடும்பம் போல அரசு நிலத்தை கொள்ளையடித்துக் கொண்டு ஜாமீன் வாங்கி அலைகிறவர் அல்ல. ஒரு குடிமகனுக்கு சட்டத்தின் வழியில் நீதிமன்றத்தை நாடுவதற்கு இடமுண்டு அதனடிப்படையிலேயே சென்றுள்ளார் என்றும்,

சிஸ்டம் சரியில்லை என்பதற்கு இன்றைய சம்பவங்களே உதாரணம். சட்டப்படி 30 நாளுக்கு மேலாக காலியாக இருக்கும் மண்டபத்துக்கு வரி நிவாரணம் கேட்க சம்மந்தபட்டவருக்கு உரிமை உண்டு. அதனால் ரஜினிகாந்த் சட்டப்படி வரி நிவாரணம் கேட்டு மாநகராட்சிக்கு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார் என்று பலரும் கொந்தளித்தனர்.

அதில் ஒருவர், ‘’நீங்க வசதியானவர் தானே.. எங்க சொல்லுங்க உங்களுக்கு எம்,பி. கோட்டாவில் கிடைக்க கூடிய ஒரு சலுகையாவது வேண்டாம் என சொல்லி இருப்பீங்களா.. சொல்லமாட்டீங்க ஏன்னா அது உங்க உரிமை.. அது மாதிரி தான்.. இது உழைத்து சாப்பிடுபவரின் உரிமை.. திகாரில் இப்ப வசதி எப்படி? போயி நண்பர்கள் கிட்ட சொல்லுங்க” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

உடனே ஜோதிமணீ, ’’நான் வசதியான எம்.பி. அல்ல. சம்பளம் மட்டுமே.. அதிலும் ஆதரவற்ற முதியோர் 10 பேருக்கு மாதம் ரூ1000 – 10,000 கொடுக்கிறேன். எம்.பி க்கு விமானத்தில் பிஸினஸ் வகுப்பு உண்டு. ஆனால் எளிய மக்கள் பயன்படுத்தும் எகானமி வகுப்பையே பயன்படுத்துகிறேன்… தொகுதி பணி தவிர எதற்கும் எம்.பி. கோட்டாவை பயன்படுத்துவதில்லை’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.