Home ஆன்மிகம் பூஜை அறையில் இருக்க வேண்டிய சாமி படங்கள்!

பூஜை அறையில் இருக்க வேண்டிய சாமி படங்கள்!

ஒரு வீடு என்றால் எது இருக்கிறதோ இல்லையோ ஒரு பூஜை அறை நிச்சயம் இருக்கும். இடம் இல்லையா சமையல் அறையின் ஒரு சின்ன செல்ஃப் பூஜை அறையாக மாறி இருக்கும். அந்த அளவுக்கு தமிழர்களின் உணர்வுவோடு கலந்தது பூஜை அறை.

பூஜை அறையில் எந்தெந்த தெய்வங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட விக்கிரகங்களை வைக்க வேண்டும், எதை நாம் வைத்துக் கொள்ளக் கூடாது. சுவாமி படங்கள், விக்கிரகங்கள், யந்திரங்களுக்கு பூஜை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

சாமி படங்கள் அலங்காரமல்ல !

பூஜை அறையில் எந்தக் கோயிலுக்கு போனாலும் சில பொருட்களை சுவாமி படங்கள், விக்கிரகங்கள், சிலைகள் வாங்கி வைக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. இந்தமாதிரி, வாங்கி வைத்தவுடன் நிறைய கஷ்டங்கள் வரும். ஏன் நமக்கு இப்படி கஷ்டம் வருது. நல்லாதானே இருந்தோம் ஏன் இந்த திடீர் மாற்றம். பூஜை அறையில் நிறைய சுவாமி படங்களை கொச கொசன்னு வைத்திருப்பார்கள். பொதுவாக, பூஜை அறையில் விநாயக பெருமான், ஒரு விக்கிரகம், ஒரு மகாலட்சுமி இப்படிதான் இருக்க வேண்டும்.

விநாயகர்

நிறைய வீடுகளில் நான்கு லட்சுமி விக்கிரகமும், ஐந்து லட்சுமி ஓவிய படமும், சுத்தி விநாயகர் படமும் ஐந்தாறு விக்கிரகமுமாக இருக்கும். இந்தமாதிரி இருந்தால் ஒரு அலங்காரம் பொருள் மாதிரி காட்சியளிக்கும்.

எந்தந்த சாமி படங்களை வைக்கலாம் ?

பூஜை அறையில் மகா மங்கள தெய்வங்களான முழுமுதற்கடவுளான விநாயக பெருமான், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ மகாலட்சுமியுடன் கூடிய பகவான் நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது ராதையுடன் கூடிய கிருஷ்ணர், தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, பால திரிபுரசுந்தரி மற்றும் லலிதாம்பாள், அஷ்டலட்சுமி ஆகிய அம்பிகை படங்களும், குரு சாய்ராம், ராகவேந்திரர், யோகி ராம் சுரத்குமார் அல்லது நீங்கள் வணங்குகிற குரு இருக்க வேண்டும்.

அதற்கு அடுத்தாற்போல், கல்வி ஞானத்துக்கு அதிபதியான சரஸ்வதி மிகமிக முக்கியமாக இருக்க வேண்டும். குலம் காக்கும் குல தெய்வம் படம் அது உக்கிரமாக இருந்தாலும் நிச்சயமாக இருக்க வேண்டும். நவக்கிரகங்களை வைத்து வணங்கக்கூடாது என்ற கருத்து பொதுவாக உள்ளது. ஆனால், வீட்டிலேயே நவக்கிரகங்களை சிறிய அளவில் பாடமாக வைத்து வணங்கலாம். நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்களை போக்க சனிக்கிழமைகளில் இதற்கு விளக்கேற்றி பூஜை செய்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும்.

பூஜை

சுவாமி படங்களை வைக்க

பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும். பூஜையறையில் ஒரே அளவுள்ள படங்களை மாட்டினால் பார்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும். பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும். பூஜை அறையில் பூஜை அறைக்கான சாமான்கள் மட்டுமே இருக்க வேண்டும். புதிய சுவாமி படங்களை நீங்கள் வாங்கினால் அவை ஒரே அளவு கொண்டதாக இருந்தால் பூஜை அறை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்

எக்கச்சக்கமாக தெய்வப் படங்களையோ, தெய்வத் திருவுருவங்களையோ வைத்து நிரப்புவதைவிடக் கண்ணுக்கு நிறைவாக இருக்கும் குறைந்த எண்ணிக்கையோடு இவற்றை நிறுத்திக் கொள்வது நல்லது. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.

-வித்யா ராஜா

மாவட்ட செய்திகள்

Most Popular

‘பாஸான 70% பேர் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதியவர்கள்’: கல்வியாளர்கள் அதிருப்தி!

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான...

விபத்தில் இறந்த ராணுவ வீரர் உடல் காஞ்சிபுரம் வந்தடைந்தது!

அசாமில் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஏகாம்பரம் உடல் சொந்த ஊரான காஞ்சிபுரம் வந்தடைந்தது. காஞ்சிபுரம் வெள்ளை...

“கொட்டும் ரத்தத்தோடு ,முனகல் சத்தத்தோடு …”-பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கிடந்த பெண் நாய்

மும்பையின் போவாய் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் ‘நூரி’ என்ற எட்டு வயது பெண் நாய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கிடந்தது .

சென்னை திநகர் நகைக்கடையில் கொள்ளை : திருவள்ளூர் கொள்ளையனின் காதலியிடம் விசாரணை!

சென்னை தி.நகர் நகைக்கடையில் கொள்ளையடித்தது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள மூசா தெருவில் இயங்கி வந்த உத்தம் நகைக் கடையில்...
Do NOT follow this link or you will be banned from the site!