மெசேஞ்சரில் புது வசதிகள் – ஃபேஸ்புக் அறிமுகம் !

 

மெசேஞ்சரில் புது வசதிகள் – ஃபேஸ்புக் அறிமுகம் !

மெசேஞ்ஜரில் புதுப்புது வசதிகளை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

சாட்டிங் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் இந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதிய லோகோவை பேஸ்புக் அறிமுகப்படுத்தி உள்ளது. முன்பு நீல நிறத்தில் இருந்த லோகோ தற்போது நீலமும் பிங்க் நிறமும் கலந்த வகையில் மாற்றப்பட்டுள்ளது. அதேப்போல, புதிய சாட் தீம்ஸ் அறிமுகப்படுத்தி உள்ள பேஸ்புக் செல்ஃபி ஸ்டிக்கர்ஸ் என்ற புதிய வசதி யையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

மெசேஞ்சரில் புது வசதிகள் – ஃபேஸ்புக் அறிமுகம் !

மேலும், வேனிஷ் மோட் என்ற வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. அதன்படி சாட்டிங் செய்து விட்டு இன்பாக்ஸை விட்டு சென்றவுடன் மெசேஜ்கள் தானாகவே அழிந்துவிடும் வகையில் அந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

  • எஸ். முத்துக்குமார்