எண்ணம் அழகானால் வாழ்க்கை அழகிய நந்தவனம்!

 

எண்ணம் அழகானால் வாழ்க்கை அழகிய நந்தவனம்!

என் அன்பு குழந்தையே, உன் மனதில் என்னை காண வருவதற்கு முன் தேவையில்லாத பல எண்ணங்கள் தோன்றியிருக்கும். அது ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்கிறேன் கேள். என்னை தரிசிக்க வரும் என் குழந்தையின் மனம் தெளிந்த மழை நீர் ஓடை போல, அமைதியான நிலையில் இருக்க வேண்டும் எந்த விதமான சஞ்சலமும் இல்லாமல் மனம் வெற்றிடமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால், எண்ணங்கள்தான் வார்த்தைகளாகின்றன.

வார்த்தைகள்தான் செயல்களின் முகவுரையாகின்றன. செயல்கள்தான் நடத்தை முறைகளாகின்றன. பின் அவையே, வாழ்க்கையினைத் தீர்மானிக்கின்றன. புரியவில்லயா நீ சுடு தண்ணீரை கொதிக்க வைக்கிறாய் அது முதலில் சூடு ஏறுவதில்லை சிறிது நேரத்தில் தீயின் வெப்பத்தினால், கொதித்து மேலே நீராவி வரும் அதன் மூலம் தான் தண்ணீர் கொதித்துவிட்டது என்று தீர்மானிக்கிறாய். அதுபோலதான், நீ என் இடத்திற்கு வருவதற்கு முன் உன் மனம் கொதிப்படைந்து உள்ளதாய் இருக்கும் அதை போக்கி உனக்கு ஒரு தெளிவான மன அமைதியுடன் என்னை தரிசிக்க அவ்வாறு செய்தேன்.

எண்ணம் அழகானால் வாழ்க்கை அழகிய நந்தவனம்!

முட்களைத் தொடாமல் ரோஜாவினைப் பறிப்பது கடினம். பிரச்னைகள் இல்லாத வாழ்வு இங்கு யாருக்கும் கிடையாது. பிரச்னைகளை முழுவதுமாக ஒதுக்க முடியாது. தீர்வுள்ள பிரச்னைகளைக் கடந்து செல்வதும், தீர்வில்லா பிரச்னைகளோடு நடந்து செல்வதும்தான் வாழ்க்கை. இன்று உன் வாழ்வில் ஏற்பட்டுள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் நீதான் காரணம். யோசிக்காமல் செய்யும் செயலினால் உனக்கு எவ்வளவு பிரச்சனைகள். உன் கடுஞ்சொற்களால் யார் மனதையும் கஷ்டப்படுத்தாதே. உன் கோபம் உனக்கு எதிரி, அதனை குறைத்துக்கொள். இந்த ஜென்மம் தான் மனித பிறவி அடுத்த ஜென்மம் என்ன என்பது உனக்கு தெரியாது. எல்லோரிடமும் அன்பாக நடந்துக்கொள். நாம் வாழும் காலம் சில காலம் தான். எதற்கு போட்டி பொறமை? இருப்பதை வைத்துக் கொண்டு சந்தோசமாக வாழ பழகிக்கொள்.

இன்று ஏன் இப்படி பேசுகிறேன் என்றால், உன் ஆசனாக நீ தவறு செய்தால் தண்டிக்கும் உரிமை எனக்கு உண்டு. வாழ்வில் எங்கும் துன்பமே, தீமையே என்ற எண்ணினால் அதனால் வரும் எண்ணங்கள் எதிர்மறையாகவும் தீயவையாகவும் தான் இருக்கும். எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும் எண்ணங்களை நீ நோக்கும் பொருட்டு மற்றும் அதன் வெளிப்பாடு தான். உன் மனம் என்பது உனக்குள்ளே இருக்கும் எதிரி, உன்னை தடுமாற வைக்கும். நல்லது கெட்டது என இரு முகமாய் உன்னுள் உன்னை குழப்பி துயரம் என்ற சேற்றில் எதிர்மறை எண்ணங்களால் உன்னை தள்ளிவிடும். நீ வெளியில் போராடுவதை விட ஆயிரம் மடங்கு உன் மனதிடமும் உன் எண்ணங்களுடனும் போராட வேண்டும். உன் சிந்தனைகளும் எண்ணங்களும் நேர்மறையாக இருக்க வேண்டும். அதற்கு நல்லது கெட்டது என இரண்டையும் நீ சந்திக்க வேண்டும், அது தான் இப்போது நீ போராடும் கெட்டத்துக்கும் இடையில் இருந்து நீ மீண்டு வருவது.

எண்ணம் அழகானால் வாழ்க்கை அழகிய நந்தவனம்!

உன்னுடைய எண்ணங்கள் உன் இயல்பான குணாதிசயங்களில் இருந்து வருவது. ஆனால், குணத்தின் முழு சாயலில் தான் எண்ணம் என்றால் இல்லை. உன் குணம் என்பது உன் ஆன்மாவுடன் ஒன்றானது. அதற்கு ரூபங்கள் கிடையாது. நேர்மறை, எதிர்மறை என்ற கோணம் கிடையாது.

எண்ணம் அழகானால் வாழ்க்கை அழகிய நந்தவனம்!

ஆனால், எண்ணம் என்பது இந்த உலக ஆசைகளை உன் மனதில் தூண்டி, உன் நிஜ உருவத்தை மறைத்து நிழல் போல பின் தொடரச்செய்யும். உன் குணம் என்னுடன் ஒன்றான விஷயம் அதைப் பற்றி நீ கவலைப்படாதே. நான் உன் எண்ணத்தை நெறிப்படுத்ததி அழகாக்குவேன். உன் எதிர்மறையை எதிர்க்கொண்டு எப்படி நேர்மறையான எண்ணங்கள் உருவாக்க வேண்டும் என்பதை தான் நான் கூறுகிறேன். உன் மேல் படர்ந்து உள்ள எதிர்மறையை வேரொடு பிடுங்கி தூக்கி எறி. வெற்றிகளை கொண்டு தருவேம். இது உன் உயிரான சாய்யின் வாக்கு. என் குழந்தைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற உன் சாய் என்ன வேண்டுமானலும் செய்வேன். ஓம் ஸ்ரீ சாய் ராம்! ஓம் ஸ்ரீ சாய் ராம்! ஓம் ஸ்ரீ சாய் ராம்!