“கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுக்க 1500 போலீசார் பாதுகாப்பு” – போக்குவரத்து காவல் ஆணையர் தகவல்

“கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுக்க 1500 போலீசார் பாதுகாப்பு” – போக்குவரத்து காவல் ஆணையர் தகவல்

கோவை

கோவையில் விதிகளை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் நபர்களை தடுக்க, 34 இடங்களில் தடுப்புகள் அமைத்து, ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக, மாநகர போக்குவரத்து காவல் ஆணையர் ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டத்தில் 10 மணிக்கு மேல் அனைத்து கடைகளையும் அடைக்க உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும், இதனை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

“கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுக்க 1500 போலீசார் பாதுகாப்பு” – போக்குவரத்து காவல் ஆணையர் தகவல்

மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறி ஈடுபடும் நபர்களை தடுக்கும் வகையில் மாவட்டத்தின் அனைத்து மேம்பாலங்களும் அடைக்கப்பட்டுள்ளது என்றும், முக்கிய சாலைகளில் இருபுறமும் பந்தல் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். அதேபோல், பெரும்பாலான முக்கிய சாலைகள் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளதாக கூறிய காவல் ஆணையர், இந்த ஆண்டு விபத்துக்கள் இல்லாத புத்தாண்டாக கொண்டாட உள்ளதாகவும் தெரிவித்தார்.