பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15 சதவிகித ஊதிய உயர்வு! – தொழிற்சங்கங்கள் ஏற்பு

 

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15 சதவிகித ஊதிய உயர்வு! – தொழிற்சங்கங்கள் ஏற்பு

பொதுத் துறை வங்கி ஊழியர்களுக்கு 15 சதவிகித ஊதிய உயர்வு வழங்குவது என்று தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் பொதுத் துறை வங்கிகளுக்கு இடையேயான ஊதிய பேச்சு வார்த்தை கடந்த புதன் கிழமை முடிவுக்கு வந்துள்ளது. இந்த கூட்டத்தில் 2017 நவம்பர் 1 முன் தேதியிட்டு 15 சதவிகித ஊதிய உயர்வு வழங்குவது என்று இரு

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15 சதவிகித ஊதிய உயர்வு! – தொழிற்சங்கங்கள் ஏற்புதரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அடிப்படை சம்பளம் மற்றும் டி.ஏ-வில் இந்த 15 சதவிகித உயர்வு இருக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு 7,898 கோடி ரூபாய் வங்கிகளுக்கு கூடுதல் செலவாகும். கிட்டத்தட்ட 10 லட்சம் பொதுத் துறை வங்கி ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15 சதவிகித ஊதிய உயர்வு! – தொழிற்சங்கங்கள் ஏற்புஇந்த புதிய ஊதிய உயர்வு என்பது 2017 நவம்பர் 1 முதல் 2022 அக்டோபர் வரைக்கு மட்டுமே பொருந்தும். வங்கிகள் தரப்பில் ஊழியர்களின் திறமைக்கு ஏற்ற ஊதியம் என்ற புதிய நடைமுறையை பரிந்துரைத்ததாக தெரிகிறது. இந்ததிட்டம் வந்தால் லாபத்துடன் இயங்கும் வங்கிகளில் பணிபுரிவோருக்கு கூடுதல் சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. வங்கிகள் தரப்பிலும் மேலும் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அது பற்றி தொடர்ந்து வங்கி தரப்புடன் விவாதிக்கப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.