நெய்வேலி என்எல்சி விபத்தால் மேலும் ஒருவர் மரணம்; உயிரிழப்பு 15 ஆக உயர்வு!

 

நெய்வேலி என்எல்சி விபத்தால் மேலும் ஒருவர் மரணம்; உயிரிழப்பு 15 ஆக உயர்வு!

தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்.எல்.சி அனல் மின் நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த மாதம் 1 ஆம் தேதி திடீரென 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

நெய்வேலி என்எல்சி விபத்தால் மேலும் ஒருவர் மரணம்; உயிரிழப்பு 15 ஆக உயர்வு!

இந்த விபத்தில், நிகழ்விடத்திலேயே 6 பணியாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பணியாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் சிவகுமார் என்ற பொறியாளர் கடந்த மாதம் 3 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும் செல்வராஜ் என்ற ஒப்பந்தத் தொழிலாளியும், ரவிச்சந்திரன் என்ற பொறியாளரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் என்ற ஊழியர் உயிரிழந்தார். இந்த விபத்தில், இதுவரை 2 இளநிலை பொறியாளர், 10 ஒப்பந்த தொழிலாளர்கள், 2 நிரந்தர தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.