மீண்டும் 15 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் – கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

 

மீண்டும் 15 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் – கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

கோவா: மீண்டும் 15 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

கோவா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால், ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். அதுதவிர கோவா மாநிலத்திற்கு சில தளர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் பேசினேன். மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று எண்ணுகிறேன். இருப்பினும், மாநிலத்தில் சில தளர்வுகள் இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். 50 சதவிகித உணவகங்களை சமூக விலகல் நடவடிக்கைகளுடன் அனுமதிக்க வேண்டும். அதேபோல உடற்பயிற்சி செய்ய ஜிம்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்” என்றார்.

உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்களுக்காக காத்திருப்பதாகவும், மாநிலத்திற்கு தளர்வுகள் கிடைத்தால் அதற்கேற்ப கோவாவுக்கு ஊரடங்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று கோவா முதல்வர் கூறியுள்ளார். கோவாவில் கொரோனா பாதிப்பால் 69 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.