கலவரமாக மாறிய பேரணி… 15 பேர் மீது FIR… சிசிடிவி காட்சிகள் ஆய்வு!

 

கலவரமாக மாறிய பேரணி… 15 பேர் மீது FIR… சிசிடிவி காட்சிகள் ஆய்வு!

டெல்லி கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 15 பேர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளதாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என்று கூறியிருக்கும் காவல் துறை, சிசிடிவி மற்றும் பிற வீடியோ காட்சிகளை ஆய்வுசெய்து வருகிறது.

விவசாயிகள் பேரணி வன்முறையாக வெடித்து டெல்லியே கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது. பேரணி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, விவசாயிகள் போர்வையில் ஒரு சில விஷமிகள் பேரணியில் ஈடுபட்டு அமைதியைக் கெடுக்கலாம் என்று விவசாய சங்கத்தினர் கூறியிருந்தனர்.

அவர்கள் சொன்ன வாய்முகூர்த்தம் நேற்று பலித்துவிட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மூன்று வழித்தடங்களில் பேரணி நடத்த டெல்லி போலீஸ் அனுமதி வழங்கியது. அதன்படி, அனுமதிக்கப்படாத பகுதிகளில் விவசாயிகள் நுழையாமல் இருப்பதற்காக தடுப்பரண்கள் போட்டு பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.

கலவரமாக மாறிய பேரணி… 15 பேர் மீது FIR… சிசிடிவி காட்சிகள் ஆய்வு!

பல விவசாயக் குழுக்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் பேரணி நடத்திக்கொண்டிருந்த வேளையில், ஒரு சில குழுக்கள் மட்டும் தடுப்பரண்களை தகர்த்தெறிந்து மத்திய டெல்லிக்குள் முன்னேற முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்த காவல் துறை தடியடி நடத்தியது.

அதையும் மீறியதால் அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் பதிலுக்கு அவர்களும் காவலர்களை தாக்கினர். இதனால் வன்முறை வெடித்தது.

டெல்லியே போர்க்களமாக மாறியதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின், இணைய வசதி துண்டிக்கப்பட்டது; மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து டெல்லியில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பிவருகிறது.

கலவரமாக மாறிய பேரணி… 15 பேர் மீது FIR… சிசிடிவி காட்சிகள் ஆய்வு!

இச்சூழலில், வன்முறையில் ஈடுபட்டவர்களை இனங்காணும் பணியில் டெல்லி போலீஸ் தீவிரம் காட்டிவருகிறது. போலீஸை தாக்கிவிட்டு செங்கோட்டையில் கொடி ஏற்றியவர்கள் யார், யார் என்பதையும் கண்டுபிடித்துவருகின்றனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண கலவரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஆய்வுசெய்து வருகின்றனர். குறிப்பாக, லல்கிலா, மத்திய டெல்லி, முகர்பா, நாங்லோய், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கின்றனர்.

கலவரமாக மாறிய பேரணி… 15 பேர் மீது FIR… சிசிடிவி காட்சிகள் ஆய்வு!

ஆய்வுசெய்ததில் இதுவரை 15 பேர் இனங்காணப்பட்டு, அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக டெல்லி போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு இந்த நடவடிக்கை தொடரும் எனவும், வன்முறையைத் தூண்டிவிட்ட விவசாயிகள் போர்வையில் இருந்த விவசாய சங்க தலைவர்களையும் அடையாளம் கண்டு கைது செய்வோம் என்றும் கூறியிருக்கிறது.