‘ரத்தம் வரும் அளவுக்கு’… குழந்தையை தாக்கிய தாய்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

‘ரத்தம் வரும் அளவுக்கு’… குழந்தையை தாக்கிய தாய்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செஞ்சி அருகே குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்க்கு 15 நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் தாய் ஒருவர் பச்சிளம் குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மோட்டூரைச் சேர்ந்த துளசி(22) என்பவர் தனது கணவர் மீதான வெறுப்பில் குழந்தையை கொடூரமாக தாக்கியது தெரியவந்தது.

‘ரத்தம் வரும் அளவுக்கு’… குழந்தையை தாக்கிய தாய்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதனடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். துளசியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரேம்குமார் என்பவருடன் கள்ள தொடர்பில் இருந்ததால் குழந்தையை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆந்திராவில் துளசியை கைது செய்தனர்.

ஈவு இரக்கமின்றி குழந்தையை சரமாரியாக தாக்கிய துளசிக்கு மனநலம் பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா என விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது. அவரை பரிசோதித்த மனநல மருத்துவர் துளசிக்கு மனநலம் பாதிப்பு இல்லை என உறுதி செய்தார். இதையடுத்து, செஞ்சி நீதிமன்றத்தில் இன்று துளசியை போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி துளசியை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.