15 வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி இப்படித்தான் சான்ஸ் தேடினார்…

 

15 வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி இப்படித்தான் சான்ஸ் தேடினார்…

 

2005ம் ஆண்டு, அதாவது சுமார் 15 வருடங்களுக்கு முன்புடி.வி. தொடர்களில் சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கேட்டு 3,000 ரூபாய் செலவழித்து விஜய் சேதுபதி தந்த விளம்பர டிசைன் ஒன்று வல்தளங்களில் வைரலாகி வருகிறது.

vijaysethupathi

2010ல் சீனு ராமசாமியின் ‘தென்மேற்குப் பருவக்காற்று’படத்தில் அறிமுகமாவதற்கு முன் நடிகர் விஜய் சேதுபதி, தனுஷின்  ‘புதுப்பேட்டை’,கார்த்தியின்’சிறுத்தை’போன்ற படங்களில் 300 ரூபாய் தினக்கூலியில் நடித்து வந்த கதைகளை அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அதற்கும் முன்னர் 2004ம் ஆண்டிலிருந்தே படங்களிலும், டிவி தொடர்களிலும் நடிக்க மும்முரமாய் அலைந்து வந்த விஜய் சேதுபதி கொடுத்த விளம்பரத்தை பத்திரிகையாளர் ஒருவர் முக நூலில் வெளியிட தற்போது பலரும் அதை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

vijaysethupathi

இப்போதைய வலைதள ட்ரெண்ட் வருவதற்கு முன் ‘90களில் சினிமா டைரிகள் பிரபலமாக இருந்தன. வாய்ப்புத் தேடிக்கொண்டிருக்கும் நடிகர்களுக்கும் நடிகர்களைத் தேடிக்கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கும் பாலமாய் இருந்தவை அந்த சினிமா டைரிகள் மட்டுமே. இன்று அவை வழக்கொழிந்துவிட்டன. அந்த டைரிகளில் முழுப்பக்க விளம்பரங்களுக்கு பிரபல நடிகர்களாயிருந்தால் 5ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையும் விஜய் சேதுபதி போல் வாய்ப்பு தேடுகிற புதுமுகங்களாயிருந்தால் ரூ 3 ஆயிரமும் விளம்பரக் கட்டணங்களாய் வசூலிக்கப்பட்டன. வரலாறு முக்கியம் மக்களே…

பின்குறிப்பு…இந்த விளம்பரத்திலுள்ள எந்த எண்ணையும் தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம்.பின் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது…