15-வது ஆட்டோ எக்ஸ்போ 2020 – புதியதாக என்னென்ன வாகனங்கள் அறிமுகம் ஆகியுள்ளன?

 

15-வது ஆட்டோ எக்ஸ்போ 2020 – புதியதாக என்னென்ன வாகனங்கள் அறிமுகம் ஆகியுள்ளன?

15-வது ஆட்டோ எக்ஸ்போ 2020 நிகழ்வில் அறிமுகம் ஆகியிருக்கும் வாகனங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

நொய்டா: 15-வது ஆட்டோ எக்ஸ்போ 2020 நிகழ்வில் அறிமுகம் ஆகியிருக்கும் வாகனங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஆட்டோமொபைல் துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 15-வது ஆட்டோ எக்ஸ்போ 2020 நிகழ்வு இன்று முதல் நொய்டாவில் தொடங்கியுள்ளது. வருகிற 12-ஆம் தேதியுடன் இந்த நிகழ்வு முடிவடைகிறது. நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பத்திரிகை, ஊடகங்களுக்காக ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வு அறிமுகம் செய்யப்பட்டது. இன்று முதல் பொதுமக்கள் இந்த ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் பங்கேற்கலாம்.

ttn

தினமும் காலை 11 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்வு இரவு 8 மணிக்கு முடிவடைகிறது. இந்தாண்டு கிரேட் வால் மோட்டார்ஸ், மாருதி சுசுகி, ஹுண்டாய், டாடா மோட்டார்ஸ், எம்.ஜி மோட்டார், கியா மோட்டார்ஸ், வோல்க்ஸ்வேகன், ஸ்கோடா, மகிந்த்ரா, ரெனால்ட், மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் பங்குபெறுகின்றன.

ttn

இந்த நிகழ்ச்சியில் ஸ்கோடா நிறுவனத்தின் விஷன் ஐ.என். கான்செப்ட் எஸ்.யு.வி. கார் , மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வி கிளாஸ் மார்க்கோ போலோ ஆகிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் வோல்க்ஸ்வேகன் ஐடி கிராஸ் கான்செப்ட் கார் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த காரை வருகிற 2021-ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பியாஜியோ நிறுவனம் அப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர். 160 ஸ்கூட்டரை இந்த ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ttn

ஒடிசாவை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் ஈவ் இந்தியா நிறுவனம் இரண்டு புதிய பிரீமியம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இந்த விழாவில் அறிமுகம் செய்தது. அவை ஃபோர்செடி என்ற ஸ்கூட்டரும், டெசரோ எலெக்ட்ரிக் பைக்கும் ஆகும். மாருதி சுசுகி நிறுவனம் இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்தது. புதிய இக்னிஸ் காரில் பி.எஸ்.6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாருதி சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய விட்டாரா பிரெஸ்ஸா கார் இந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.