15 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

 

15 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

விக்கெட் சரிவை ஹோல்டர் ஒரு பக்கம் ஹோல்ட் பண்ணிவைக்க, மறுபுறம் விக்கெட்கள் சரிந்துகொண்டே வந்தன. ஒருவழியாக, 46ஆவது ஓவரை வீசிய ஸ்டார்க் இரண்டு விக்கெட்களை கைப்பற்ற, வெஸ்ட் இண்டிஸ் அணியின் வெற்றிக்கனவு அப்பொழுதே தகர்ந்தது. கைவசம் இரண்டு விக்கெட்கள் மட்டுமே இருக்க, கடைசி 4 ஓவர்களில் 37 ரன்கள் தேவைப்பட்டன.

உலககோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 79 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஸ்மித்தும் கேரியும் இணைந்து சிறிது நேரம் தாக்குப்பிடித்தாலும் 45 ரன்களில் கேரி அவுட்டானார்.

Smith

அதன்பின்னர் களமிறங்கிய கோல்ட்டர் நைல், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பதம்பார்க்க, 200 ரன்களுக்குள் முடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி 49ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் 288 ரன்களுக்கு இழந்தது. நைல் 92 ரன்களும், ஸ்மித் 73 ரன்களும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பரத்வெய்ட் 3 விக்கெட்களும், தாமஸ், கோட்ரெல், மற்றும் ரஸ்ஸெல் தலா இரண்டு விக்கெட்களும் சாய்த்தனர்.

West Indies Bowling

வெற்றிக்கு 289 என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்கோர் ஏழாக இருந்தபோது முதல் விக்கெட்டை இழந்தது. ஹோப் மற்றும் பூரன் இருவரின் தேர்ந்த ஆட்டத்தால், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை நோக்கி நிதானமாக சென்றது. ஒரு கட்டத்தில் அதாவது 39ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 216 ரன்கள் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்திருந்தது. விக்கெட் சரிவை ஹோல்டர் ஒரு பக்கம் ஹோல்ட் பண்ணிவைக்க, மறுபுறம் விக்கெட்கள் சரிந்துகொண்டே வந்தன.

Australia Team

ஒருவழியாக, 46ஆவது ஓவரை வீசிய ஸ்டார்க் இரண்டு விக்கெட்களை கைப்பற்ற, வெஸ்ட் இண்டிஸ் அணியின் வெற்றிக்கனவு அப்பொழுதே தகர்ந்தது. கைவசம் இரண்டு விக்கெட்கள் மட்டுமே இருக்க, கடைசி 4 ஓவர்களில் 37 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரில் தொடர்ச்சியாக நர்ஸ் 4 பவுண்டரிகளை அடிக்க முடிந்ததோடு வெஸ்ட் இண்டீஸ் திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆயினும் மேற்கு இந்திய தீவுகள் அணியால் 9 விக்கெட்களை இழந்து 273 ரன்களே எடுக்கமுடிந்தது. எனவே, ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஸ்டார்க் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.