15 நபருக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தால் ஹாட்ஸ்பாட்! உங்கள் மாவட்டம் இருக்கா?

 

15 நபருக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தால் ஹாட்ஸ்பாட்! உங்கள் மாவட்டம் இருக்கா?

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் 1242பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று ஒரேநாளில் 38பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்.

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 15 நபருக்கு மேல் ஒரு மாவட்டத்தில் கொரொனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால் அந்த மாவட்டம் ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

coronvirus

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, நெல்லை, கரூர், ஈரோடு, விருதுநகர், வேஊர், கன்னியாகுமரி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், திருப்பூர், திருவாரூர், தேனி, சேலம், நாமக்கல், நாகை ஆகிய மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.