15 ஏவுகணை செலுத்ததினோம்… 80 அமொிக்க பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்! – பதற்றத்தை தந்த ஈரான் அறிவிப்பு

15 ஏவுகணை செலுத்ததினோம்… 80 அமொிக்க பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்! – பதற்றத்தை தந்த ஈரான் அறிவிப்பு

ஈரான் நாட்டு ராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிர்ச் சேதம் இல்லை என்று அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று ஈரான் அறிவித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டு ராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிர்ச் சேதம் இல்லை என்று அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

qassem-suleimani

அதில், “புதன்கிழமை காலை ஈரான் நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அமெரிக்கப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது, ஈரான் 15 ஏவுகணைகளைச் செலுத்தித் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்காவின் ஹெலிகாப்டர்கள், ராணுவத் தளவாடங்கள் பலத்த சேதம் அடைந்தன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த செயலுக்கு இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈராக்கில் அமெரிக்கா மட்டுமின்றி இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தெரிந்தும் இதுபோன்ற தாக்குதல் நடத்துவது ஏற்புடையது இல்லை. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று இங்கிலாந்து எச்சரக்கைவிடுத்துள்ளது. ஈரானின் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவும் ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது ஈரான், ஈராக் பிராந்தியத்தில் போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.