15 ஆடுகளை பள்ளியில் சேர்த்த பெற்றோர்கள்…! ஏன்?

 

15 ஆடுகளை பள்ளியில் சேர்த்த பெற்றோர்கள்…! ஏன்?

பிரான்ஸில் பள்ளி மூடப்படுவதை கண்டித்து ஆடுகளை பள்ளியில் சேர்த்து பெற்றோர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். 

பிரான்ஸில் பள்ளி மூடப்படுவதை கண்டித்து ஆடுகளை பள்ளியில் சேர்த்து பெற்றோர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். 

பொதுவாக ஒரு தொடக்கப் பள்ளியோ, உயர்நிலை பள்ளியோ செயல்படுவதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலவேண்டும். இல்லையெனில் மாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி அந்த பள்ளியை மூடும் உரிமை கல்வித்துறைக்கு உள்ளது. அனைத்து நாடுகளிலும் இந்த முறை நடைமுறையிலுள்ளது. 

 

 

இந்நிலையில் ஆல்ப்ஸ் என்ற கிராமத்திலிருக்கும் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் அப்பள்ளியை மூட பிரான்ஸ் கல்வி ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் பள்ளியை மூடுவதில் கல்வித்துறை உடும்பு பிடி பிடித்தது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் 15 செம்மறி ஆடுகளை பள்ளியில் சேர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி 50 க்கும் அதிகமான ஆடுகளை பள்ளியினுள் விட்டு மேயவிட்டனர். மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளும் கல்வித்துறை, அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.