Home க்ரைம் 15 வயது சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை ! உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் !!

15 வயது சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை ! உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் !!

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சமூகத்தில் எங்கு சென்றாலும் பாதுகாப்பு இல்லாத நிலையில் நண்பர்கள், உறவினர்களிடமே பழகுவதற்கு பெண் குழந்தைகள் தயங்கி வருகின்றனர்.  

உத்தரபிரதேசம் ஷாம்லி மாவட்டம் ஜலாலாபாத் நகரில் தன்னுடைய 15 வயது மகளை தன்னுடைய கணவரே பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக பெண் ஒருவர் போலிசில் புகார் அளித்துள்ளார்.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சமூகத்தில் எங்கு சென்றாலும் பாதுகாப்பு இல்லாத நிலையில் நண்பர்கள், உறவினர்களிடமே பழகுவதற்கு பெண் குழந்தைகள் தயங்கி வருகின்றனர்.  இதனால் சமூகத்தில் மற்றொருவர் மீதான நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆசிரியர், உறவினர், அண்டை வீட்டார் என யாரையுமே நம்பி பெண் குழந்தைகளை விட்டு  விட்டு செல்ல முடியாத நிலையில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது தந்தை மட்டுமே. ஆனால் அப்படிப்பட்டவர்களில் ஒருசில வக்கிர புத்தி படைத்த தந்தைகளால் மகள்கள் நாசமாக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் உத்தரவிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

arretsed-67.jpg

ஷாம்லி மாவட்டம் ஜலாலாபாத் நகரில் வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் தனது 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் தந்தை. வெளியில் சென்ற மனைவி வீட்டிற்குள் வந்து மகள் அழுததை பார்த்துள்ளார். ஏன் என்று கேட்க தனக்கு தந்தையால் நிகழ்ந்த கொடூரத்தை சொல்லி அழுதுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தபெண் கணவருடன் சண்டைபோட்டுள்ளார். இதற்கு பதில்சண்டை போட்ட கணவர் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் மோசமான விளைவுகள் ஏற்படும் என மிரட்டி உள்ளார். ஆனால் அதற்கு பயப்படாத அந்த பெண் உடனே காவல்நிலையம் சென்று புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் சிறுமியிடம் விசாரித்த பின்னர் தந்தைமீது போக்ஸோ சட்டத்தின் 376, 378 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Most Popular

பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் சிவ சேனா…. மேல்முறையீடு செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ்..

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக சிவ சேனா தெரிவித்துள்ளது. அதேசமயம் சிவ சேனாவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சி.பி.ஐ. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு...

கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி

கர்நாடகாவில் நவம்வர் 3ம் தேதியன்று 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும்...

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச அரசு ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் குற்றம்சாட்டினார். உத்தர பிரதேசத்தில் முதல்வர்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்… புதிதாக பிரச்சினை உருவாக்காதீங்க… இக்பால் அன்சாரி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்த சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்பை வரவேற்பதாக அயோத்தி நில வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி...
Do NOT follow this link or you will be banned from the site!