14ம் தேதி மேற்கு வங்கம் செல்கிறார் ரஜினிகாந்த்

 

14ம் தேதி மேற்கு வங்கம் செல்கிறார் ரஜினிகாந்த்

அரசியலுக்கு வருவதாக இருந்த ரஜினிகாந்த் தேர்தல் நேரத்தில் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்தார். எதிர்காலத்திலாவது அவர் வருவாரா என்று கொஞ்சம் இருந்த எதிர்ப்பார்ப்பினையும் உடைக்கும்படியாக இன்று எதிர்காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டார். ரஜினி மக்கள் மன்றத்தையே கலைத்துவிட்டார்.

14ம் தேதி மேற்கு வங்கம் செல்கிறார் ரஜினிகாந்த்

இந்த நிலையில் அவர் வரும் 14ம் தேதி , நாளை மறுதினம் மேற்கு வங்கம் செல்கிறார். அங்கே நான்கு நாட்கள் தங்கி இருந்து அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

14ம் தேதி மேற்கு வங்கம் செல்கிறார் ரஜினிகாந்த்

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில்தான் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று வந்தார். டப்பிங் பணிகள் மட்டுமே இன்னும் நிறைவடையவில்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இன்னும் நான்கு நாட்கள் நடித்தால் அதோடு ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிவிடும் என்கிறார்கள்.

தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வருவதால் பட வேலைகள் விரைந்து நடந்து வருகின்றன.