சென்னையில் ஒரே குடியிருப்பில் 14 பேருக்கு கொரோனா

 

சென்னையில் ஒரே குடியிருப்பில் 14 பேருக்கு கொரோனா

சென்னையில் 600க்கும் மேற்பட்ட பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு பகுதியில் மூன்று பேருக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்தால் அது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

மதுரையிலும் இப்படித்தான் மூன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்ததால் 18 தெருக்களை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து தகரம் வைத்து அடைக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் ஒரே குடியிருப்பில் 14 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் சென்னையில் ஒரே குடியிருப்பில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் 7 வீடுகளை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அடுக்குமாடியில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில், 14 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இதனால் சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் என்றும், மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் என்றும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது.