ஜனவரி 14ல் ரஜினியை சந்திக்கும் அமித்ஷா… நேரடி பிடியில் இருந்து நழுவ முடியுமா?

 

ஜனவரி 14ல் ரஜினியை சந்திக்கும் அமித்ஷா… நேரடி பிடியில் இருந்து நழுவ முடியுமா?

இரண்டு நாள் பயணமாக கடந்த நம்பர் மாதம் 21ம்தேதி அன்று உள்துறைஅமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். அந்த பயணத்தின் போது அவரை ரஜினிகாந்த் சந்திக்கிறார் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசி வரையிலும் அமித்ஷாவை சந்திக்கவே இல்லை. அமித்ஷாவின் அழுத்தத்தினால்தான் ரஜினி கட்சி ஆரம்பிக்கிறார் என்ற பேச்சுகள் இருந்த நிலையில், ரத்த அழுத்த காரணமாக கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்துவிட்டார்.

ஜனவரி 14ல் ரஜினியை சந்திக்கும் அமித்ஷா… நேரடி பிடியில் இருந்து நழுவ முடியுமா?

இந்நிலையில் வரும்14ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று நடைபெற இருக்கும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டுவிழாவில் பங்கேற்க அமித்ஷா சென்னை வருவதாக தகவல் வெளியாகிஉள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 14 தேதி அன்று

அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறதா? என்ற சந்தேகத்திற்கு அமித்ஷா துக்ளக் விழாவில் தெரிவிப்பார் என்கிறார்கள். நவம்பர் மாத பயணத்தில் கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டணி தொடர்கிறது என்றூ பேசியும், அதற்கு பதில் பேசாத அமித்ஷா, இந்த விழாவில் பேசும்போது கூட்டணி குறித்து பேசுவார் என்கிறார்கள்.

ரஜினி கட்சி தொடங்குவதை பாஜக பெரிதும் எதிர்பார்த்திருந்ததாகவும், அவர் கட்சி தொடங்கவில்லை என்பதால் அதிமுகவுடன் தான் பாஜக கூட்டணியை அறிவிக்கும் என்ற பேச்சு இருப்பதால், அமித்ஷா இந்த விழாவில் அதிமுக கூட்டணி குறித்து பேசுவார் என்று அழுத்தமாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஜனவரி 14ல் ரஜினியை சந்திக்கும் அமித்ஷா… நேரடி பிடியில் இருந்து நழுவ முடியுமா?

கடந்த ஆண்டு துக்ளக் பொன்விழாவில் துணைஜனாதிபதி வெங்கையா நாயுடுவுடன் ரஜினியும் பங்கேற்றார். குருமூர்த்தி அந்த விழாவில், ரஜினி நிறைய பேசுவார் என்று சொல்லியும், துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கலந்துகொண்டதால், அவர் முன்பாக அவர் பதவிக்கு முன்பாக அரசியல் பேசக்கூடாது என்று தவிர்த்தார் ரஜினி. ஆனாலும், முரசொலி வைத்திருந்தால் திமுக காரன், துக்ளம் வைத்திருந்தால் அறிவாளி என்றும், சேலத்தில் ராமரையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள் என்று பெரியாரையும் கடுமையாக சாடி பரபரப்பையும், விவாதங்களையும் எழுப்பினார்.

2018ல் நடந்த துக்ளக் பத்திரிகையின் 48வது ஆண்டு விழாவில் அப்போதைய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பங்கேற்றார். 14.1. 2017ல் நடந்த 47வது துக்ளக் ஆண்டுவிழாவில் சோ இல்லை. 46 ஆண்டுகளாக சோ இருந்த மேடையில் முதன் முறையாக அவர் புகைப்படம் இருக்கிறது என்று ரஜினி குறிப்பிட்டார்.

உடல்நலம் கருதி ஓய்வெடுப்பதால் இந்த ஆண்டு ரஜினியால் துக்ளக் விழாவி பங்கேற்க முடியாது என்று தெரிகிறது. அதே சமயம், துக்ளக் விழாவிற்கு வரும் அமித்ஷா, ரஜினியை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்.

உடல்நலம்குறித்து விசாரிக்கிறாரோ இல்லையோ, வரும் தேர்தலில் வாய்ஸ் கொடுக்கச்சொல்லி கேட்பார் என்று பேச்சு எழுந்திருக்கிறது.

ரஜினி கட்சி தொடங்காவிட்டாலும், 1996ல் செய்தது போல் அரசியலில் தனது பங்களிப்பை செய்வார் என்று குருமூர்த்தியும், அர்ஜூன மூர்த்தியும் சொல்லி இருப்பதால் அமித்ஷாவும் வாய்ஸ் கொடுக்கச்சொல்லி ரஜினியிடம் கேட்க வாய்ப்பிருக்கிறது என்றே தெரிகிறது. குருமூர்த்தியின் மூலமாக அமித்ஷா பேசிவந்ததாகவும், அவரிடம் ரஜினி நழுவி வந்ததாகவும் சொல்லப்படும் நிலையில் அமித்ஷாவின் நேரடி பிடியில் இருந்து ரஜியால் நழுவ முடியுமா என்று தெரியவில்லை.