கலிபோர்னியாவில் நண்பனை மணந்த டாக்டர்! திருமண உடையினால் கர்நாடகாவில் கொந்தளிப்பு!

 

கலிபோர்னியாவில் நண்பனை  மணந்த டாக்டர்! திருமண உடையினால் கர்நாடகாவில் கொந்தளிப்பு!

அந்த டாக்டர் தன்பாலினத்தவரான நண்பனை மணந்துகொண்டது கூட பரவாயில்லை போகட்டும். ஆனால், திருமணத்தின் போது எங்கள் பாரம்பரிய உடையை அணிந்துகொண்டு எப்படி இப்படி ஒரு காரியத்தை செய்யலாம் என்று கொந்தளிக்கிறார்கள் கொடவாஸ் இன மக்கள்.

அமெரிக்காவில் டாக்டராக இருக்கும் ஷரத் பொன்னப்பா, வட இந்தியாவைச்சேர்ந்த நண்பன் சந்தீபா டோசஞ்சை கடந்த செப்.26ஆம் தேதி அன்று கலிபோர்னியாவில் திருமணம் செய்துகொண்டார்.

தன்பாலினத்தவரையே திருமணம் செய்துகொண்டதால் அவரைச்சார்ந்தவர்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். இது ஒருமுறம் இருக்க, இந்த திருமணம் வீடியோவினை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதால், அது வைரல் ஆகி வருகிறது.

இதனால், திருமணத்தின்போது அவர்கள் அணிந்திருந்த ஆடைதான் கொடவாஸ் இன மக்களை ஆத்திரப்பட வைத்திருக்கிறது. கர்நாடகாவின் கொடவாஸ் இன மக்கள், தங்கள் பாரம்பரிய உடையினை இப்படி ஒரு திருமணத்திற்கு எப்படி உபயோகப்படுத்தலாம் என்று கொந்தளித்து வருகிறார்கள்.