முதலமைச்சர் ‘வெற்றி’ வேட்பாளர்! கவனத்தை ஈர்க்கும் ரவீந்திரநாத்

 

முதலமைச்சர் ‘வெற்றி’ வேட்பாளர்! கவனத்தை ஈர்க்கும் ரவீந்திரநாத்

வரவிருக்கும் தேர்தலை கருத்தில்கொண்டு அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்து அதற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. முதலமைச்சர் வேட்பாளர் நாற்காலிக்காக ஒற்றைகாலில் நின்ற ஓபிஎஸ் கடைக்கட்டத்தில் நிலைமையை உணர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கே வழிவிட்டார். அதிமுக தலைமைக்கழகத்திலும் இன்று காலையில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தார் அதிமுகவின் ஒருங்கிணைப்பளர் ஓபிஎஸ்.

இதையடுத்து மாலையில் ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். வழிகாட்டுதல் குழுவினர்களாக அறிவிக்கப்பட்ட 11 பேரும் ஓபிஎஸ்க்கு நன்றி தெரிவித்தனர்.

முதலமைச்சர் ‘வெற்றி’ வேட்பாளர்! கவனத்தை ஈர்க்கும் ரவீந்திரநாத்

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்காக, வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ் மகனும் தேனி எம்.பியுமான ரவீந்திரநாத், முதலமைச்சர் ‘வெற்றி’ வேட்பாளர் என்று குறிப்பிட்டுள்ளதை கட்சியினர் கவனிக்கத்தவறவில்லை.

’’கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தினால் முதலமைச்சர் ‘வெற்றி’ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளதே, எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்தை ஈர்க்கத்தான் என்கிறார்கள்.