ஓபிஎஸ்க்கு பாஜக ஆதரவுக்கரம் நீட்டுகிறதா?

 

ஓபிஎஸ்க்கு பாஜக ஆதரவுக்கரம் நீட்டுகிறதா?

அமைச்சர்கள் முதல் அடிமட்டத்தொண்டர்கள் வரையிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கே ஆதரவுக்கரம் நீட்டி வருவதை அறிந்து, அவரே முதல்வர் வேட்பாளராக இருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஓபிஎஸ் என்று தகவல் வந்தது. அப்புறமும் எதற்கு பல கட்ட ஆலோசனை நடக்கிறது என்று விசாரித்தால், ஆட்சியை பிடிக்கத்தான் முடியவில்லை என்று, கட்சியையாவது தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வந்துவிட வேண்டும் என்று ஓபிஎஸ் வைத்த கோரிக்கையினால்தான் ஓபிஎஸ், ஈபிஎஸ் வீடுகளில் அமைச்சர்கள் மாறி மாறி பல கட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தனர் என்று தெரியருகிறது.

ஓபிஎஸ்க்கு பாஜக ஆதரவுக்கரம் நீட்டுகிறதா?

கட்சியை ஒற்றை தலைமயின் கீழ் கொண்டு வந்துவிட நினைத்து, தனது கீழ் மட்டுமே கட்சி இயங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் ஓபிஎஸ். மேலும், வழிகாட்டுதல் குழு தொடர்பான அவர் வைத்த நிபந்தனைகளும் ஈபிஎஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு நீங்கள் முடிவை சொல்லிவிட்டு, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்து விடுங்கள் என்று கறார் காட்டியிருக்கிறார்.

ஓபிஎஸ்சின் பிடிவாதத்தினால்தான்இரவிலும் கூட ஆலோசனை நடைபெற்றிருக்கிறது.

ஓபிஎஸ்க்கு பாஜக ஆதரவுக்கரம் நீட்டுகிறதா?

நேற்று இரவு பிரதமர் மோடிக்கு அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து கடிதத்திற்கு அவர் தனக்கு அனுப்பிய பதில் கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் ஓபிஎஸ். இதன் மூலமாக தனக்கு மோடியின் ஆதரவு இருப்பதாக சொல்கிறாரா என்றும் கேள்வி எழுந்திருக்கிறது. இதனால், அதிமுக சீனியர்கள், ஓபிஎஸ்சின் நிபந்தனைகளை கவனத்துடன் கையாண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.