மம்முட்டியுமில்ல, எஸ்.பி.வேலுமணியும் இல்ல; உண்மையான வீட்டு ஓனர் யார் தெரியுமா?

 

மம்முட்டியுமில்ல, எஸ்.பி.வேலுமணியும் இல்ல; உண்மையான வீட்டு ஓனர் யார் தெரியுமா?

அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேரளாவில் 200 கோடியில் ஆடம்பர பங்களா கட்டியிருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவுவதோடு அல்லாமல், நீச்சல்குளம், உயர்ரக பொருட்கள் என்று அந்த ஆடம்பர பங்களாவின் வீடியோவும் வைரலாகி வருகிறது. ஆனால், இது அமைச்சரின் வீடு அல்ல. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் பங்களா என்று அதிமுகவினர் தெரிவிக்கிறார்கள்.

மம்முட்டியுமில்ல, எஸ்.பி.வேலுமணியும் இல்ல; உண்மையான வீட்டு ஓனர் யார் தெரியுமா?

மம்முட்டி புதிதாக கட்டியிருக்கும் ஆடம்பர பங்களாதான் இது என்று சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரைல் ஆகி இருக்கிறது. அதை வைத்துதான் அமைச்சர் தரப்பினர், இந்த வீடியோ மம்மட்டிக்கு சொந்தமான பங்களா என்று சொல்லிவருகிறார்கள்.

மம்முட்டியுமில்ல, எஸ்.பி.வேலுமணியும் இல்ல; உண்மையான வீட்டு ஓனர் யார் தெரியுமா?

கோவையில் உள்ள 10 தொகுதிகளில் ஒரு தொகுதி மட்டுமே திமுக வசம் இருக்கிறது. கோவையைச்சேர்ந்த ஒரு அமைச்சரை டேமேஜ் செய்தால் தங்களுக்கு அது சாதகமாக அமையும் என்று பொய்க்கணக்கு போட்டு திமுக இப்படி வலைத்தளங்களில் பரப்பி வருவதாக அதிமுகவினர் ஆத்திரப்படுகின்றனர்.

மம்முட்டியுமில்ல, எஸ்.பி.வேலுமணியும் இல்ல; உண்மையான வீட்டு ஓனர் யார் தெரியுமா?

மம்முட்டியின் பங்களாவை எஸ்.பி.வேலுமணியின் பங்களா என்று திமுகவினர் மீது அதிமுகவினர் இப்படி ஆத்திரத்தில் இருக்க, சமூக வலைத்தளங்கள் மீது ஆத்திரத்தில் இருக்கிறாராம் ரெஜி.

மம்முட்டியுமில்ல, எஸ்.பி.வேலுமணியும் இல்ல; உண்மையான வீட்டு ஓனர் யார் தெரியுமா?

யாரோட பிள்ளைக்கு யாரோட இனிசியலை வைக்குறீங்க? என்று அவர் ஆத்திரப்படுகிறார். அவர் ஆத்திரப்படுவதில் நியாயம் இருக்கிறது. உண்மையில் அந்த பங்களாவுக்கு சொந்தக்காரர் அவர்தான்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் குருப்பம்பாடியில் 10 ஆயிரம் சதுர அடியில் கடந்த பிப்ரவரி மாதம் கட்டிமுடிக்கப்பட்ட அந்த மேன்சனைத்தான் மம்முட்டியின் புதிய பங்களா என்று நெட்டிசன்கள் விளையாடிவிட்டார்கள். அதற்காக கடந்த மே மாதம், ’’எனது வீட்டின் வீடியோ மம்மூட்டியின் வீடு என சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது’’என்று மலையாள மனோரமாவுக்கு அது என் பங்களா என்று பேட்டி கொடுத்திருக்கிறார் ரெஜி.

மம்முட்டி, எஸ்.பி.வேலுமணி…அந்த ரெஜியோட பங்களா வீடியோவை வைத்து அடுத்து நெட்டிசன்கள் விளையாடப்போகும் நபர் யாரோ?