நடிகையின் ரீ டுவீட்! மீண்டும் வைரலாகும் வீடியோவினால் கொந்தளிக்கும் பாஜக

 

நடிகையின் ரீ டுவீட்! மீண்டும் வைரலாகும் வீடியோவினால் கொந்தளிக்கும் பாஜக

நடந்து முடிந்த ஒரு விவாரத்தை மீண்டும் வேண்டுமென்றே தங்களுக்கு எதிராக திசை திருப்பப்படுகிறது என்று பாஜகவினர் கொந்தளித்து வரும் நிலையில், அந்த வீடியோவினை நடிகை காஜல் பசுபதியும் ரீ டுவீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

நடிகையின் ரீ டுவீட்! மீண்டும் வைரலாகும் வீடியோவினால் கொந்தளிக்கும் பாஜக

உத்தரபிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட பெண் பொதுக்கிணற்றில் குடிநீர் எடுத்ததாக கூறி, அந்தப்பெண்ணை ஆதிக்க சாதியினர் செய்யும் அநியாயத்தை பாருங்கள் என்று ஒரு இளம்பெண்ணை காட்டுப்பகுதியில் பல ஆண்கள் சேர்ந்து கொண்டு ஆடையை அவிழ்த்து, பிரம்புகளினாலும், கையாலும் அடித்து, தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி போட்டு மிதிக்கும் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் ஒரு வீடியோ பதிவினை நடிகை காஜல் பசுபதி ரீ டுவீட் செய்திருக்கிறார்.


இந்த வீடியோ கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவினைப்பார்த்த ராகுல்காந்தி, 30.5.2020ல் பெண் தாக்கப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ராகுல்காந்தியின் டுவிட்டுக்கு பின்னர் அந்த விவகாரம் தீயாய் பரவியது. ஆனால், மோடியின் ஆசீர்வாதத்தினால் நடக்கும் உ.பி. யோகியின் ஆட்சி லட்சணத்தை பாருங்கள் என்று, பாஜகவுக்கு எதிராக அந்த வீடியோவை வைத்து கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்த வீடியோவின் உண்மை குறித்த சில தகவல்களும் அப்போது வெளியாகி இருந்தது.

அதாவது, அந்த சம்பவம் நடந்தது உபியில் உள்ள குஜராத்தில் என்று தெரியவந்தது. மேலும், தாழ்த்தப்பட்ட பெண்ணை ஆதிக்க சாதியினர் தாக்கவில்லை. அது காதல் விவகாரம் என்றும் தெரியவந்தது.

குஜராத்தின் சோட்டா உதய்பூரில் 16 வயசு பெண் 20 வயது இளைஞரை காதலித்து அவருடன் சென்றுவிட நினைத்தபோது, உறவினர்கள் பிடித்துவிட்டனர். அதனால், அவரது தந்தை உள்ளிட்ட உறவினர்கள் அந்த பெண்ணை அடித்து, உதைத்ததோடு மட்டும் அல்லாமல், 20 வயது காதலனை தனது தோளில் தூக்கி சுமந்து நடக்கும்படி தண்டனை கொடுத்ததுதான் அந்த சம்பவம் என்றும் தகவல் வெளியானது.

நடிகையின் ரீ டுவீட்! மீண்டும் வைரலாகும் வீடியோவினால் கொந்தளிக்கும் பாஜக

இதுகுறித்த செய்தியும் 31.5.2020ல் டைம் ஆப் இந்தியா நாளிதழிலும் வெளியாகி இருக்கிறது. இத்தனை விளக்கம் வெளிவந்தபின்னரும், தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு எதிராக நடந்த அக்கிரமம் என்றே மீண்டும் வைரலாகி வருவதனால், இது பாஜகவுக்கு எதிராக திட்டமிட்டே செய்யப்படும் சதி என்று அக்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள்.

ஆனாலும், பெண்ணுக்கு எதிரான குற்றம் எங்கே நடந்தால் என்ன? எதற்காக நடந்தால் என்ன? குஜராத்திலும் பாஜக ஆட்சிதானே நடக்கிறது. சம்பவமும் குஜராத்தில்தான் நடந்திருக்கிறது. அப்படி இருக்கையில், இந்த தவறூக்கு முழு பொறுப்பும் பாஜக காரணமென்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. இது எப்படி சதியாகும் என்றே கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.