’’எல்லா டிக்கெட்டையும் அவுங்களே எடுத்துக்கிட்டா நாங்க நின்னுக்கிட்டே படம் பார்க்குறதா?’’கொந்தளிக்கும் திமுக சீனியர்கள்

 

’’எல்லா டிக்கெட்டையும் அவுங்களே எடுத்துக்கிட்டா நாங்க நின்னுக்கிட்டே படம் பார்க்குறதா?’’கொந்தளிக்கும் திமுக சீனியர்கள்

ஐ பேக்குடன் திமுக ஒப்பந்தம் போட்டபோதே திமுக சீனியர்களுக்கு அடிவயிறு கலக்க ஆரம்பித்துவிட்டது. அதற்கு ஏற்றமாதிரியே பல நடவடிக்கையினால் ‘ஐபேக்’ பிரசாந்த் கிஷோரும் சீனியர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கினார்.

தலைமைக்கே கண்டிஷன் போடும் அளவுக்குத்தான் திமுகவில் பல சீனியர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சீனியர்களுக்கு ஐபேக் டீம் போட்டகண்டிஷன்களால், ’’நேற்று வந்த பொடிப்பையன் எனக்கு உத்தரவு போடுவதா?’’என்று எரிந்து விழுந்தவர்கள், ஸ்டாலினிடத்திலும் இதே ரியாக்‌ஷனை காட்ட,

’’வர்ற எலக்‌ஷன்ல ஜெயிக்கிற வழிய பார்க்கணும். அதுக்கு அவுங்க(ஐபேக்) சொல்லுறதுக்கு ஒத்துப்போங்க’’என்று கறாராக சொல்லவும், படு அப்செட்டில் இருக்கிறார்கள்.

’’எல்லா டிக்கெட்டையும் அவுங்களே எடுத்துக்கிட்டா நாங்க நின்னுக்கிட்டே படம் பார்க்குறதா?’’கொந்தளிக்கும் திமுக சீனியர்கள்

ஐபேக்குடன் திமுக ஒப்பந்தம் போடுவதற்கு முன்பாகவே அதுபற்றிய பேச்சு இருந்தபோதே, யார் யாருக்கு சீட் கொடுக்குறதுன்னு அந்தந்த மாவட்டம், ஒன்றியம் முடிவு செய்யும். இந்த குரூப் உள்ளே வந்திட்டா, யார் யாருக்கு சீட்டுன்னு எல்லா முடிவையும் அந்த குரூப்தான் கை காட்டும். அப்புறம் நம்ம கதி என்னவாகுறதுன்னு கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. சீனியர்கள் அன்றைக்கு கவலைப்பட்டதுதான் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது.

’’எல்லா டிக்கெட்டையும் அவுங்களே எடுத்துக்கிட்டா நாங்க நின்னுக்கிட்டே படம் பார்க்குறதா?’’கொந்தளிக்கும் திமுக சீனியர்கள்

யாருக்கெல்லாம் சீட் கொடுக்கலாம் என்று ஐபேக் தயார் செய்துகொண்டிருக்கும் லிஸ்டில் பெரும்பாலும் ஜூனியர்களின் பெயர்கள்தான் இருக்குதாம். இதைதெரிந்துகொண்டு சீனியர்கள் கலக்கத்தில் இருக்கும் நேரத்தில், உதயநிதி தனியாக ஒரு லிஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறாராம். அந்த லிஸ்டில் முழுக்க

’’எல்லா டிக்கெட்டையும் அவுங்களே எடுத்துக்கிட்டா நாங்க நின்னுக்கிட்டே படம் பார்க்குறதா?’’கொந்தளிக்கும் திமுக சீனியர்கள்

முழுக்க தனது இளைஞரணியினரையே சேர்த்துக்கொண்டிருக்கிறாராம்.
அவர் லிஸ்ட் எடுத்துக்கொண்டிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், கூட்டணி போக மூன்றில் ஒரு பங்கு சீட்டை தான் சொல்லுபவர்களுக்குத்தான் கொடுக்கணும் என்று இப்போதே வீட்டுக்குள் கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டாராம்.

ஆக, ஐபேக் லிஸ்டிலும், உதயநிதி லிஸ்டிலும் ஜூனியர்கள்தான் இருப்பதால் ஜூனியர்கள் தரப்பு குஷியோ குஷி. இது தெரிந்து, ’’எல்லா டிக்கெட்டையும் அவுங்களே எடுத்துக்கிட்டா நாங்க நின்னுக்கிட்டே படம் பார்க்குறதா?’’என்று கொந்தளிக்கிறார்களாம் சீனியர்கள்.