‘கேரளாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா’.. 10 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு!

‘கேரளாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா’.. 10 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு!

கேரள மாநிலத்தின் 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘கேரளாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா’.. 10 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு!

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா பாதிப்பு பரவிய மாநிலம் கேரளா தான். அம்மாநில அரசின் அதிரடி நடவடிக்கையால் அங்கு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் இது சாத்தியமானது. ஆனால், கடந்த 2 மாதங்களாக கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

‘கேரளாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா’.. 10 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு!

தற்போது அம்மாநிலத்தில் 90,565 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக வரும் 15ம் தேதி வரை மேற்கண்ட மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் கேரள அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒரு சில மாதங்களே ஆகும் நிலையில், தற்போது மீண்டும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.