144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 5 நாட்களில், வாகன ஓட்டிகளிடம் ரூ.10 லட்சம் அபராதம் வசூல்!

 

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 5 நாட்களில், வாகன ஓட்டிகளிடம் ரூ.10 லட்சம் அபராதம் வசூல்!

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அதனால் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வெளியே வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, மீண்டும் அவர்கள் வெளியே வராமல் தடுத்து வருகின்றனர். 

ttn

கடந்த செவ்வாய் கிழமை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 5 நாட்களிலேயே 45 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 34,119 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் விதியை மீறுபவர்களிடம் இருந்து ரூ.10,89,108 அபராதம் பெறப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுமட்டுமில்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வெளியே சுற்றித் திரிவது, 144 தடை உத்தரவை மீறுவது ஆகிய குற்றங்களுக்காக  தனித்தனியே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.