அன்று அறையில் நடந்தது இன்று மேடையில்! அதிமுக செயற்குழுவில் நடந்த களேபரம்!

அன்று அறையில் நடந்தது இன்று மேடையில்! அதிமுக செயற்குழுவில் நடந்த களேபரம்!

முதல்வர் வேட்பாளர் யார்? என்று அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு தரப்பினரும் மல்லுக்கட்டி வரும் பரபரப்பான சூழலில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஐந்து மணி நேரத்திற்கு மேலாக நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, ‘’வரும் அக்டோபர் 7ம் தேதி அன்று அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் மாதம் 7ஆம் தேதி அறிவிக்கப்படும். அன்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்சும் இணைந்து அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.

அன்று அறையில் நடந்தது இன்று மேடையில்! அதிமுக செயற்குழுவில் நடந்த களேபரம்!

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்று செயற்குழுவில் காரசார விவாதம் நடைபெற்றிருக்கும் நிலையில், இன்றைக்கே அறிவிக்காமல் ஏன் ஏழாம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்? இதற்காகவா ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக செயற்குழு நடந்திருக்கிறது.

அன்று அறையில் நடந்தது இன்று மேடையில்! அதிமுக செயற்குழுவில் நடந்த களேபரம்!

இதே முதல்வர் வேட்பாளர் யார் என்கிற விவாகரம் தொடர்பாக கடந்த 18ம் தேதி நடைபெற்ற அதிமுக ஆலோசனைக்கூட்டத்திலேயே, ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் மேடையில் நேருக்கு நேர் விவாதம் செய்யாவிட்டாலும், தனித்தனியாக மைக் பிடித்த இருவரும் ஒரு பிடி பிடித்தனர். அக்கூட்டம் முடிந்ததும், இருவரும் தனி அறையில் அமர்ந்து காரசாரமாக விவாதம் செய்தனர்.

அன்று அறையில் நடந்தது இன்று மேடையில்! அதிமுக செயற்குழுவில் நடந்த களேபரம்!

ஆனால், இன்றைய செயற்குழுவில் மேடையிலேயே காரசாரமாக இருவரும் நேருக்கு நேர் விவாதம் செய்திருக்கிறார்கள்.

’’முதல்வராக நான் சிறப்பாக செயல்படவில்லையா? கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். பிரதமராலேயே பாராட்டப்பட்டிருக்கிறேன்? நானே தொடர்கிறேனே ’’என்று ஈபிஎஸ் கேட்க,

‘’நீங்கள் சிறப்பாக ஆட்சி செய்துவிட்டீர்கள். அடுத்து எனக்கு வழி விடுங்கள்’’என்று ஓபிஎஸ் சொல்ல,

‘’துணை முதல்வராக இருப்பதாகத்தானே ஒப்புக்கொண்டு வந்தீர்கள். இப்போது என்ன?’’ என ஈபிஎஸ் எகிற, ‘’நடக்கின்ற ஆட்சியில்தான் நான் துணை முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டேன். எப்போதும் துணைமுதல்வரக இருக்க நான் ஒத்துக்கொண்டதில்லை. ஒருபோதும் ஒத்துக்கொள்ளவும் மாட்டேன்’’என்று காட்டமாக சொல்லியிருக்கிறார்.

அன்று அறையில் நடந்தது இன்று மேடையில்! அதிமுக செயற்குழுவில் நடந்த களேபரம்!

நீண்டுகொண்டே போன இந்த வாதத்தில் ஒரு கட்டத்தில், ’’என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா. உங்களை முதல்வர் ஆக்கியது சசிகலா’’ என்று ஓபிஎஸ் சொல்ல, ’’நம்ம ரெண்டு பேரையுமே முதல்வர் ஆக்கியது சசிகலாதான்’’ என்று மடக்கியிருக்கிறார் ஈபிஎஸ்.

அன்று அறையில் நடந்தது இன்று மேடையில்! அதிமுக செயற்குழுவில் நடந்த களேபரம்!

வாக்குவாதம் இப்படி நீண்டுகொண்டே சென்றதால், ஒரு முடிவும் எட்டாமல் போய்விட்டது. இதனால் இது சம்பந்தமாக கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் கலந்து பேசி முடிவெடுத்துக்கொள்ளலாம். அந்த முடிவுக்கு இருவரும் கட்டுப்பட்டு, ’இருவரும் ஒன்றாக சேர்ந்தே’ அந்த முடிவை அறிவிக்கலாம் என்று இப்போதைக்கு ஒரு முடிவை எடுத்து, அந்த அறிவிப்புக்காக அக்டோபர் 7ம் தேதி என்றும் நாள் குறித்திருக்கிறார்கள்.

அன்று அறையில் நடந்தது இன்று மேடையில்! அதிமுக செயற்குழுவில் நடந்த களேபரம்!

ஈபிஎஸ் பக்கமே பலரும் நிற்பதால், அவர்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என்றே செயற்குழுவில் பங்கேற்றவர்களில் பலரும் சொல்லிவருகிறார்கள்.

  • கதிரவன்