‘14,000 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி!’ – பிரபல ஜோதிடர் கணிப்பு!

 

‘14,000 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி!’ – பிரபல ஜோதிடர் கணிப்பு!

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். 

திமுக தலைவராகவும், திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராகவும் இருந்த கலைஞர் மு.கருணாநிதி மறைந்ததையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து, வருகிற 28-ம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

அதற்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ம் தேதி ஆகும். கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரை தக்க வைக்க திமுகவும், திருவாரூரை கைப்பற்ற அமமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் கோதாவில் இருப்பதால் இந்த தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அமமுக, அதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் இன்று தங்களது வேட்பாளரை அறிவிக்கும் என அக்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

dhina

அதன்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருவாரூர் இடைத்தேர்தலில் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். காமராஜ், அமமுக மன்னார்குடி மாவட்ட செயலாளர் ஆவார். அவர் வரும் 10-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது.

அதேபோல், திமுக சார்பில் அக்கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளரை அக்கட்சித் தலைமை நாளை அறிவிக்க இருக்கிறது. 

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பாலகுருசாமி என்கிற ஜோதிடர், இந்த இடைத்தேர்தலில் சுமார் 13,600 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரனின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என கணித்திருக்கிறார்.

ttv

அவர் கணிப்பின்படி, தினகரனின் ஜாதகத்தில் நான்கு கிரகங்களும் தற்போது கூடி நிற்பதால் அவரை எதிர்ப்பவர்கள் அழிந்துவிடுவார்கள் என்றும் 2021 வரை தினகரனின் ஜாதகம் சுக்ர திசையில் பயனிப்பதால் ஏராளமான நன்மைகள் வந்து சேறும் என்றும் பாலகுருசாமி தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.