ஆன்லைனில் கல்வி கற்பது கடினமாக இருந்ததால் 14 வயது சிறுவன் தற்கொலை

 

ஆன்லைனில் கல்வி கற்பது கடினமாக இருந்ததால் 14 வயது சிறுவன் தற்கொலை

ஆன்லைன் வகுப்பில் படிக்கும் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது ஒரு புறம் இருக்க, ஆன்லைன் வகுப்பில் பாடம் புரியவில்லை என்ற விரக்தியில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வதும் தொடர்வது அதிர்ச்சியளிக்கிறது.

ஆன்லைனில் கல்வி கற்பது கடினமாக இருந்ததால் 14 வயது சிறுவன் தற்கொலை

சென்னை பள்ளிகரணை அடுத்த மேடவாக்கம், புஷ்பா நகர், வினோத் தெருவில் வசித்து வருபவர் செல்வகுமார்- சுந்தரி தம்பதியினர், இவர்களது இளைய மகன் ஜெய்கார்த்திக்(14) செம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலகட்டம் என்பதால் பள்ளிகள் திறக்கப்படாததால் தினந்தோறும் 6 மணிநேரம் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்ததாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே ஆன்லைன் வகுப்பு பிடிக்கவில்லை என ஜெய் கார்த்திக் தனது பாட்டியிடம் தொலைபேசியில் இறுதியாக கூறியதாக தெரிகிறது. மேலும் ஆன்லைன் வகுப்பில் இன்று தேர்வு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ஜெய்கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அனைவரும் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடலை கைபற்றிய பள்ளிகரணை போலீசார் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.