தோட்டத்தில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு .. விசாரணையில் வெளியான பகீர் தகவல்; 14 வயது சிறுவன் கைது!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில், பல வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், 9 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் தோட்டத்தில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் மேல்பாக பகுதியில் வசித்து வரும் தம்பதி ராஜாங்கம்- லலிதா. கட்டிட வேலை செய்து வந்த இவர்கள் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வால் வேலைக்கு சென்று வருகிறார்களாம்.

இந்த தம்பதியின் மூன்றாவது மகள்(9), 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர் வேலைக்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்த சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் அருகே இருக்கும் மல்லிகை பூ தோட்டத்தில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார். பரிசோதனையின் முடிவில் அவர் மண்டை ஓடு உடையும் அளவிற்கு கல்லால் தாக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சம்பவ இடத்தில் போலீசார் மேற்கோண்ட விசாரணை மேற்கொண்டு, தடய அறிவியல் நிபுணர்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். அங்கு ஒரு சிறுவனின் இரத்தக்கறை படிந்த சட்டை மற்றும் பேண்ட்டை வைத்து 14 வயது சிறுவனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர் சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த சிறுவன் ஆபாச படம் பார்த்து சிறுமிக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததும், அப்போது சிறுமி சத்தம் போட்டதால் கல்லால் அடித்துக் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Most Popular

பக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன...

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து...

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகையில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ராஜ்பவனில் நடைபெற இருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான...

இன்று 5,609 பேருக்கு கொரோனா… இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்சமாக 109 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 58,211 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.63 லட்சத்தைக் கடந்துள்ளது. பரிசோதனை செய்யப்படுவோர்கள் மற்றும்...