மதம் மாறிய சிறுவன் மீது கல்லைப் போட்டுக் கொன்ற மதவெறிக் கும்பல்!?

ஒடிசா மாநிலத்தின் மல்கன்கிரி பகுதியில் ஒரு கும்பல் 14 வயது கிறிஸ்தவ சிறுவன் மீது கல் தூக்கிப்போட்டுக் கொன்றுள்ளனர்.அம்மாநிலத்தில் நக்சல் பாதிப்புக்குள்ளான மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள கெண்டுகுடா என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஜூன் 5 ம் தேதி, அந்த சிறுவனின் சகோதரர் மல்கன்கிரி காவல் நிலையத்தில் தனது சகோதரனைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். தனது மகன் காணாமல் போனதை அடுத்து அந்தச் சிறுவனின் தந்தையும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். பின்னர் காவல்துறையினரால் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Rep Image

சம்பவத்தன்று அந்த சிறுவன் மற்றும் அவனது சொந்தக்கார சிறுவர்கள் சிலரையும் ஒரு கும்பல் காட்டிற்க்குள் ஒரு கூட்டம் நடக்கிறது என்று கூட்டிச் சென்றுள்ளனர். அப்போது மற்ற சிறுவர்கள் அவர்களிடமிருந்து தப்பிக்கவே, சிறுவன் தப்பிக்கமுடியாமல் மாட்டிக்கொண்டுள்ளான். பின்னர் அந்த கும்பல் சிறுவனின் மீது கல்லைப் போட்டுக் கொண்டுள்ளனர். பின்னர் உடலை பல துண்டுகளாக வெட்டி புதைத்துள்ளனர். புதைக்கப்பட்ட உடல் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எஃப்.ஐ.ஆர் பதிவின் படி, சிறுவன், அவரது தந்தை உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டனர். அப்போதிருந்து, அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களைத் துன்புறுத்த ஆரம்பித்துள்ளனர். அந்த குடும்பத்தின் மதமாற்றமே இந்த கொலைக்கும் காரணம் என்று கூறப்படுகிறது. மதசார்பற்ற நாட்டில் மதவெறியால் அரங்கேறியுள்ள இந்த கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

பாஜகவில் இணையும் கு.க.செல்வம் : திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வரும் இவர் திமுக தலைமையிடத்துக்கு நெருக்கமானவர். இதனிடையே சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ...

நெல் ஈரமாக இருந்தாலும் கொள்முதல் செய்யப்படும் : அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி, சென்னை மட்டுமில்லாமல் திருவாரூர், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது....

`நள்ளிரவில் வேட்டை; சுட்டுக்கொல்லப்பட்ட வாலிபர்!’- ஊத்தரங்கரையில் நடந்த பயங்கரம்

நள்ளிரவில் மான் வேட்டைக்கு சென்ற வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஊத்தரங்கரையில் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ளது இளவம்பாடி காப்புக்காடு பகுதியில் அதிகமாக மான்,...

“திருட போன இடத்தில செல்போனை விட்டு சென்ற புது திருடர்கள்” -நகைக்கடை கொள்ளையில் அன்று இரவே சிக்கினார்கள் .

தொழிலுக்கு புதுசா வந்த திருடர்கள் ஒரு நகைக்கடைக்குள் புகுந்து நகை ,பணத்தை திருடி செல்லும்போது அவர்களின் செல்போனை விட்டு சென்றதால், உடனே போலீசின் கையில் அவர்கள் சிக்கினார்கள் . டெல்லியின் உத்தம் நகர் பகுதியிலிருக்கும்...