ஆஜாரான பப்ஜி மதன்; சைதாபேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

ஆஜாரான பப்ஜி மதன்; சைதாபேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பப்ஜி விளையாட்டை சொல்லிக் கொடுப்பது போல ஆபாசமாக பேசி யூடியூபில் வீடியோ வெளியிட்டு வந்தவர் பப்ஜி மதன். சைபர் கிரைம் போலீசில் இவருக்கு எதிராக 150க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்த நிலையில், தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் நேற்று தர்மபுரியில் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்ட பப்ஜி மதனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.

ஆஜாரான பப்ஜி மதன்; சைதாபேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதில், ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு பப்ஜி மதன் கோடிக்கணக்கில் சம்பாதித்ததும் 2 ஆடி கார்கள், இரண்டு பங்களாக்கள் என சொகுசு வாழ்க்கை வந்ததும் ஒன்றரை ஆண்டுகளாக வருமான வரி செலுத்தாததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதனிடையே, பப்ஜி மதனுக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வங்கி கணக்கில் ரூபாய் 4 கோடி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த வங்கிக் கணக்கை முடக்கிய போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், பப்ஜி மதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மதனின் லேப்டாப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட 700 வீடியோக்களை போலீசார் நீதிபதியிடம் சமர்ப்பித்தனர். அதில் ஆபாசமாக பேசியிருந்தது மதன் தான் என்பதை உறுதி செய்த நீதிபதிகள், ஜூலை 3ஆம் தேதி வரை மதனை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தனர். அதன் படி, பப்ஜி மதன் பூந்தமல்லி கிளைச் சிறையில் 3ஆம் தேதி வரை அடைக்கப்படவுள்ளார்.